Map of Tamilnadu

Friday, July 1, 2011

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான செய்யுள் பழமொழிகள்

தொடக்கநிலை மூன்று

1 அறம் செய விரும்பு
2 ஆறுவது சினம்
3 இயல்வது கரவேல்
4 ஈவது விலக்கேல்
5 உடையது விளம்பேல்
6 ஊக்கமது கைவிடேல்
7 எண் எழுத்து இகழேல்
8 ஏற்பது இகழ்ச்சி
9 ஐயம் இட்டு உண்
10 ஒப்புரவு ஒழுகு
11 ஓதுவது ஒழியேல்
12 ஔவியம் பேசேல்
13 தந்தை தாய் பேண்
14 நன்றி மறவேல்
15 வைகறைத் துயில் எழு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடக்கநிலை நான்கு 
கொன்றை வேந்தன் 
1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 
2 என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும் 
3 கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
4 தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
5 நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும் 
வெற்றி வேற்கை 
 1 அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல் 
 2 உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் 
 3 மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் 
 4 சுடினும் செம்பொன் தண்ணொளி கெடாது 
 5 பெருமையும் சிறுமையும் தான் தர வருமே. 
பழமொழிகள்
1   அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
2   அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
3   அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்
4   ஆத்திரக்காரனுக்கு புட்டி மட்டு
5   ஆழம் அறியாமல் காலை இடாதே
6   ஆனைக்கும் அடி சறுக்கும்
7   இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை
8   எறும்பு ஊரக் கல்லும் தேயும்
9   ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
10 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடக்கநிலை ஐந்து
பழமொழிகள்
1 அடக்கம் ஆயிரம் பொன் தரும்
2 அடாது செய்பவர் படாது படுவர்
3 அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்
4 இளமையில் கல்வி சிலையில் எழுத்து
5 உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டை
6 உப்பிட்டவரை உள்ளளவும் நினை
7 எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்
8 ஒருவர் பொறை இருவர் நட்பு
9 கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு
10 காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
11சிறு துரும்பும் பல் குட்ட உதவும்
12தன் கையே தனக்கு உதவி
13நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும்
14நிழலின் அருமை வெயிலில் தெரியும்
15நிறை குடம் நீர் தளும்பாது
திருக்குறள்
1 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
2 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனுஞ் சொல்
3 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்கு
4 கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
5 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது    
6 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம்  எல்லாம் மழை
7 அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
8 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
9 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
10 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 
தொடக்கநில ஆறு
பழமொழிகள்
1ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
2கெடுவான் கேடு நினைப்பான்
3சிறு துளி பேரு வெள்ளம் 
4கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் 
5நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
6பகுத்தறியாமல் துணியாதே 
7பதறாத காரியம் சிதறாது 
8புத்திமான் பலவான் ஆவான் 
9பொறுத்தார் பூமி ஆழ்வார் 
10மனம் உண்டானால் வலி உண்டாகும் 
11மின்னுவது எல்லாம் பொன்னல்ல 
12முதல் கோணல் முற்றும் கோணல்
13முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 
14வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 
15 வெள்ளம் வரும் முன் அணைகோல வேண்டும் 
 
 
திருக்குறள் 
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல் 
 
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே 
பசும்புல் தலைகாண்பு அரிது 
 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு 
 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை 
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு 
 
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு 
 
எண்ணென்ப  ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு 
 
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு 
 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல் 
 
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும் 

No comments:

Post a Comment