Map of Tamilnadu

Tuesday, June 28, 2011

கட்டுரை எழுதுவது எப்படி?

1 . முதல் படி - முன்னுரை
 
உங்கள் கதை எதைப் பற்றியதாக இருக்கும் என்பதற்கான அடிப்படையை நீங்கள் இங்கே கொடுக்கலாம்! 
* என்ன நேரம்?
* என்ன சூழ்நிலை?
* யார் நிலையிலிருந்து கட்டுரை வருகிறது?

எ-கா : -
அப்போது மாலை நேரத் தென்றல் மிகவும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. செடிகளில் பூத்துக்குளுங்கிக்கொண்டிருந்த மலர்கள் இலைதழைகளோடு சேர்ந்து தலை அசைத்துக்கொண்டு நடனம் ஆடின. அது மட்டுமா? அவற்றின் நறுமணமும் காற்றோடு சேர்ந்து கலந்து அப்பூங்கா எங்கும் பரவிக்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது. 


=  மாலை நேரத்தில், ராமு என்ற பையன் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கிறான், அவன் துன்பங்களை 
மறப்பதற்காக பூங்காவில் காற்று வாங்குகிறான்!  பின்னர் என்ன நடக்கிறது?
 
 
2 . இரண்டாம் படி - கட்டுரை வளர்ச்சி
* ராமுவுக்கு என்ன கஷ்டம்?
* அது, அவை எதனால், யாரால், எப்படி உண்டானது?
* அவற்றைச் சமாளிக்க ராமு என்ன செய்தான்? யாராவது உதவி செய்தார்களா?
* இறுதியில் என்ன நடந்தது? ராமு கஷ்டங்களிலிருந்து விடிக்கப்பட்டானா? இல்லையா?
 
 
3 . மூன்றாம் படி -  முடிவு
* இறுதியில் ராமுவுக்கு மன நிலை எப்படி இருந்தது?
* இச்சம்பவத்திலிருந்து ராமு என்ன கற்றுக்கொண்டான்?

 
 சரி... இப்போது, நீங்கள் இந்தத் தொடக்கத்தை  வைத்துக் கொண்டு எனக்கு ஒரு கதையை எழுதிக் காட்டுங்கள் பார்க்கலாம்.
கதை அல்லது கட்டுரை எழுதும் பொழுது, நீங்கள் அழகிய சொற்கள், இனிய வாக்கியம், பழமொழிகள், திருக்குறள் அனைத்தும் புகுத்தி எழுத மறக்க வேண்டாம்!

P6 - CCKPS 2011 மாணவர்கள் கவனத்திற்கு: இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டாலும், இதற்கு நீங்கள் தயார் படுத்திக் கொண்டு வரலாமே ஒழிய கதை வீட்டிலேயே எழுதக் கூடாது! இது வியாழன் 30/6/2011 அன்று காலையில் நீங்கள் வகுப்பில்  செய்யக் கூடிய வேலை ஆகும். :)

Saturday, June 18, 2011

தொடக்கநிலை 3 கட்டுரைப் பயிற்சி 2

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கட்டுரையை செய்து முடித்து என்னிடம் பள்ளித் திறப்பின் முதல் நாள் கொடுத்துவிட வேண்டும்.


கீழ்க்காணும் படத்தொடரை அடிப்படையாகக் கொண்டு 60 சொற்களுக்கு குறையாமல் ஒரு கட்டுரை அல்லது கதை எழுத்து. படத்தொடரின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் நீ இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பள்ளித் திடலில்                  இடைவேளை நேரம்
 
பத்து வெள்ளியை             கண்டெடுத்தான்
ஆசிரியரிடம் கொடுத்து         அதே நேரம்
காணாமல் போய்விட்டது          பணத்தைக் கொடுத்து
நன்றி கூறினான்           ஆசிரியர் பாராட்டினார்

Friday, June 17, 2011

தொ நி 6 உயர் தமிழ் வாக்கியம் முடித்தெழுதுக

ஆறாம் வகுப்பு உயர் தமிழ் மாணவர்கள் கவனத்திற்கு! என்னால் AskNLearn Portal-இல் பாடங்களைச் சேர்க்க முடியவில்லை. ஆதலால் நான் இந்தத் தளத்திலேயே பாடங்கள் கொடுக்கிறேன்! :(
 
 
தயவு செய்து நீங்கள் பாடங்களை ஒரு தாளில் எழுதி என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
 
 
1. அக்கா சமைத்த கறி தீய்ந்து போனதற்கு அவளுடைய கவனக்குறைவே காரணம் ஆகும்.

    அக்கா கவனமாக இருந்திருந்தால் அவள் ________________________________________.
 
 
 
2.  நாட்டிற்காக போராடும் சிப்பாய்களை நாட்டு மக்கள் மெச்சுகிறார்கள்.
 
     நாட்டிற்காக போராடும் சிப்பாய்கள் _________________________________________.
 
 
 
3.   மாணவர்கள் அவர்களது அனைத்து பாடங்களை ஒவ்வொரு நாளும் மீள்நோக்கம் செய்தால் தேர்வில் வெற்றி பெறுவார்.
 
     தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் _________________________________________.
 
 
 
4.  ஆசிரியர் தேர்வில் சிறப்பாக செய்த மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
 
    ஆசிரியர் மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் செல்லக் காராணம் ___________________________________________.
 
 
5.  இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் அவர்களது அடையாள எண்ணை மனப்பாடம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
 
 
    இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் கட்டாயம் _______________________________________________.

Thursday, June 16, 2011

கட்டுரைகளில் சேர்க்கவல்ல சில வாக்கியங்கள்..

மாணவர்களாகிய நீங்கள் கட்டுரை எழுதும் பொழுது மனத்தைக் கொள்ளைக் கொள்ளக் கூடிய சில நல்ல வாக்கியங்களை எழுதினால் உங்களது கட்டுரையின் தரம் கொஞ்சம் கூடும். நான் இதன் அடியில் சில சூழ்நிலைகளுக்கான நல்ல வாக்கியங்களை எப்படி புகுத்துவது என்று எழுதிக்காட்டுகிறேன்.


காலை நேரம் 

காலை வெயில் இதமான சூடு. குளிர் இன்னும் குறைந்த பாடில்லை. 
உடலில் லேசான நடுக்கம். தூக்கத்தை விட மனமில்லாமல் எழுந்த மாலா நேராகக் குளியல் அறைக் குழாயில் தன முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். அப்போது காலை மணி ..... .

மாலை நேரம்
அப்போது மாலை நேரத் தென்றல் மிகவும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. செடிகளில் பூத்துக்குளுங்கிக்கொண்டிருந்த மலர்கள் இலைதழைகளோடு சேர்ந்து தலை அசைத்துக்கொண்டு நடனம் ஆடின. அது மட்டுமா? அவற்றின் நறுமணமும் காற்றோடு சேர்ந்து கலந்து அப்பூங்கா எங்கும் பரவிக்கொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது.      அல்லது

இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவுக்கு மேலும் அவனது இன்பங்களைக் கூட்டிக் கொடுத்தது போல இருந்தது!   அல்லது


இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமு இயற்கை அன்னையின் அருமை பெருமைகளை எண்ணி பிரம்மித்துப் போயிருந்தான்!  


மன உறுதி

மகாகவி பாரதி எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார்? தரணியில் மானிடராகப் பிறப்பது அரிது! நம் ஒருவரால்தான் பார்க்க முடியும், பேசமுடியும், பாடமுடியும், சிரிக்க முடியும், சிந்திக்க முடியும். ஆகவே, நாம் உயிருடன் இருக்கும்பொழுதே நம் மனதை உறுதிப்படுத்தி நமக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்தால் என்ன

Keep watching this space!

Thursday, June 9, 2011

தொடக்கநிலை 6 சூழ்நிலைக் கட்டுரை

ஆறாம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கட்டுரையைச் செய்து பள்ளித் திறப்பின் முதல் நாள் கொடுக்க வேண்டும்.
 
 
மாணவர்கள் சற்று மன்னிக்க வேண்டும்! நான் என் கணினியில் பார்க்கும் பொழுது அனைத்து எழுத்துக்களும் நன்றாகவே தெரியக் கண்டேன். ஆனால் உங்களில் ஒரு சிலர் எழுத்துக்களைக் காணமுடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளீர்கள். நான் இப்போது மீண்டும் வேறு வகையில் அதே பாடத்தைக் கொடுக்கிறேன் நீங்கள் பாருங்கள்.
 
 
உல்லாசப் பயணம்
 
ஒரு நாள் நீயும் உன் நண்பர்களும் பாசிரீஸ் கடற்கரையில் உல்லாசப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தீர்கள்.ஓர் இனிய காலை நேரத்தில் அனைவரும் பாசிரீஸ் பெருவிரைவு போக்குவரத்து ரயில் நிலையத்தில் கூடினீர்கள். பாசிரீஸ் கடற்கரையை அடையும் போது வானம் கருக்கத் தொடங்கியது. இதனை ஒட்டி 100 சொற்களுக்கு குறையாமல் ஒரு கட்டுரை எழுது.