Map of Tamilnadu

Sunday, March 13, 2011

மார்ச் மாத பள்ளி விடுமுறை வீட்டுப்பாடம் ( P3 )

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான மார்ச் மாத பள்ளி விடுமுறை வீட்டுப்பாடம்  :
மாணவர்களே! இன்று முதல் உங்களது மார்ச் மாத பள்ளி விடுமுறை ஆரம்பம் ஆகி விட்டது அல்லவா? நீங்கள் விடுமுறையை
மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை! இருப்பினும், நீங்கள் என்னையும் கொஞ்சம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நான் உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ஒரு வீட்டுப்பாடத்தைத் தயார் செய்துள்ளேன்!  
தேவையான பொருட்கள் :
1 ஓவியத்தாள் ( Drawing Block / Art Block - 1 piece )
2 வண்ணப்பென்சில்கள் ( Coloured Pencils )
3 பேனா அல்லது பென்சில் ( Pen or Pencil )
1. ஓவியத்தாளில் உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு ஓவியம் வரையுங்கள்.
    Draw any picture that you would like to draw. It could be children playing in the park, or a visit to the zoo or the beach or something like that. Anything at all that you like. :) 
2. அந்த ஓவியத்திற்கு வண்ணம் பூசுங்கள்
    Colour that picture that you have drawn with Coloured Pencils ONLY.
3.  அந்த ஓவியத்தில் என்ன நடக்கிறது என்று 3 பெயரடைகளையும் 3   வினையடைகளையும் அந்தத் தாளிலேயே எழுதுங்கள்!
     On the picture itself, write three phrases with adjectives and three phrases with adverbs!
For Eg. : If you had drawn a boy on the picture you can write under that boy :
      ராமு நல்ல சிறுவன் , 
     ராமு வேகமாக ஓடுவான்
I do hope you will enjoy doing this work for me, as I would enjoy going through them! :)  If you have any questions or dont understand, you could always send me an email, at ladyrain72@hotmail.com, ok?
 * ஆறாம் வகுப்பு மாணவர்கள் இத்தகைய வீட்டுப்பாடம் என்னிடம் கேட்க வேண்டாம்! நான் உங்களுக்கு வேறு வீட்டுப்பாடம் தயார் செய்துள்ளேன்! நாளை மீட் பண்ணுவோம்! ;)
 

பெயரடை வினையடை

பெயரடை என்றால் ஆங்கிலத்தில் " Adjective" என்று அழைப்பார்கள்.
இது ஒரு பெயர்ச்சொல்லை ( Noun) வருணிக்க வல்லது.

எடுத்துக்காட்டாக : அழகான சிறுமி, புதுமையான பாடம், நல்ல பாடல், கேட்ட பழக்கம்

பார்த்தீர்களா? தடியான சொற்கள் எல்லாம் பெயரடைகள். அவை பெயர்ச்சொர்க்களை வருணிக்கின்றன!

வினையடை என்றால் ஆங்கிலத்தில் "Adverb"  என்று சொல்வார்கள்.
இது ஒரு வினைச்சொல்லை ( Verb) வருணிக்கக்கூடியது.

எடுத்துக்காட்டாக : வேகமாக ஓடினாள், உயரமாக பறந்தது, சட்டமாக சிரித்தார்கள், தவறாகச் செய்தான்

இப்போது பார்த்தீர்களா? தடியான சொற்கள் எல்லாம் வினையடைகள். அவையெல்லாம் வினைச்சொர்க்களை வருணிக்கின்றன!

ஆகவே, தமிழ் இலக்கணத்தில், "ஆடைமொழி" என்றால் வேறொரு சொல்லை வருணிக்கும் சொல் என்று பொருள்படும்.
* In Tamil Grammar, "adaimozhi" means a word that describes a noun or a verb. Simple? It is, isn't it ? :)

எனக்காக எனது மூன்றாம் ஆண்டு மாணவர்களது படைப்பு

தொடர்ந்து வரும் காட்சிகள் எனது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனக்காக நடத்திய நாடகமாகும். இதன் ஒலி அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லையே என்பது எனக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது!
 
சுபன், பவேஷ் என்ற இரு மாணவர்களை வகுப்பு மாணவர்களே தேர்ந்தெடுத்து நாடகத்தைப் படைத்துக் கொடுக்க மாணவர்கள் முடிவெடுத்தனர். நாடகத்திற்குப் பிறகு மறு குழுவிற்காக ஒரு கேள்வி பதில் அங்கமும் நடத்தி, சரியான விடை அளிக்கும் மாணவ நண்பர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கிச் சிறப்பித்தனர்!
 
கேள்வி பதில் அங்கம் நடத்துங்கள்! பரிசுகள் வழங்குங்கள் என்று நான் கூறாமலேயே அவர்களாகவே முடிவெடுத்து, அவர்களாகவே சொந்தச் செலவில் பரிசுப் பொருட்களை வாங்கி சக மாணவர்களை மகிழச் செய்தனர்! எனது முத்தான மாணவர்களை நான் எவ்வாறு பாராட்டுவது?
 
 

Saturday, March 12, 2011

மாணவன்  1:

ஆசிரியை! 1 வாரம் நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள் ?  Confused smile 
நான் உன்னை Miss பனுகிறைன்.Red heart
 
 
 
அவனுக்கு என் விடை :
 
அன்புள்ள ---- !
 
நான் இந்த ஒரு வாரத்தில் நான்
----
------
--------
---
 
நீ என்ன செய்யப் போகிறாய்? Eye-rolling smile
உனக்கு விருப்பமான புறப்பாட நடவடிக்கை ( CCA-IT) பள்ளி விடுமுறையில் நடைபெறுமா? Disappointed smile
 
இல்லையென்றால் நீ உன் குடும்பத்தோடு வெளியூர் எங்கேயாவது செல்வாயா? Hot smile
 
உனக்காக Adobe Photoshop CS2 எங்கே கிடைக்கும் என்பது குறித்து நான் என் நண்பர்களைக் கேட்பதோடு நானும் இணையத் தளத்தில் தேடித் பார்க்கிறேன், சரியா? Winking smile
 
நானும் உன்னை மிகவும் miss பண்ணுவேன், --- ! Red heart
 
raihana aasiriyar Red rose
 
 
மாணவன்  2:
 
Vanakkam asiriar, The pictures you send was brilliant.My sister rakshita also saw it and was confused and asked why the banana is red? I burst into laughter and told her that Ms.Raihana our tamil send it.
 
 
 

அவனுக்கு என் விடை :
 
my dear, wonderful ---- !
 
you are most welcome for the pictures.. i have more such interesting pictures as well.
 
if your sister asked you a qn like that, i am happy you laughed.
 
but i do hope you explained to her, why it was red.. did you tell her that if  you mix a strawberry or watermelon with a banana it will give you a red fruit inside?
 
hahahah. it have never been done before, but if a loving annaa explains patiently to his sister this way, maybe when she grows up, she will become a scientist and try to make the mixed fruits, right?
 
always take care of your sister, and make sure you have enough time to explain things to her. :)
 
love,
 
raihana aasiriyar.
 
-------------------------------------------------------------------
 
 
சிறு குழந்தைகள் ( இந்த மாணவர்களுடைய வயது சுமார்  8 - 9 தான் இருக்கும் ! )  நம்மிடம் சில கேள்விகள் ஆசையாகக் கேட்கும் பொது இயன்றவரை பொறுமையாக நாம் பதில் அளித்து வந்தோமானால், அது அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமைவதோடு, சிறார்களும் பெரியவர்களுடன் அன்பாகப் பழகுவர். இவ்வாறு பெரியவர்களாகிய நாம் ( பெற்றோர், ஆசிரியர்கள் ..) பிள்ளைகளை நல்ல பாதையில் வழி நடத்திச்  செல்வது எளிதாகிவிடும்! அத்துடன் நம் வருங்காலமும் ஒளி மயமாகிவிடும். நம் எதிர்காலம் நம் பிள்ளைகள் கையில் தான் இருக்கிறது.

Wednesday, March 9, 2011

"சொல்" என்றால் உங்கள் நிலைக்கு தெரிய வேண்டியது என்ன?

 
சிங்கப்பூரில் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களாகிய உங்களுக்கு பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை சில உண்டு.
 
"சொல்" என்று வார்த்தைக்கு 4 பெரிய, முக்கியப் பிரிவுகள் உண்டு.
 
 
1  பெயர்ச்சொல் - Noun
 
எ-கா : ராமு, மாலா, சிங்கப்பூர், இந்தியா, பூனை, மலர்கள், மேசை, நாற்காலி, மரம்.
 
 
 
2. வினைச்சொல் - Verb
 
எ-கா : ஓடுகிறேன், பயந்தாள், வரும், விழுந்தது, எழுதுகிறேன், சிரித்தான், கத்துகிறது
 
 
 
3. பெயரடை - Adjective
 
எ-கா : நல்ல, அழகான, சுத்தமான, பெரிய, சிறிய
 
 
 
4. வினையடை - Adverb
 
எ-கா : வேகமாக, மெதுவாக, அசிங்கமாக, அசுத்தமாக, சத்தமாக