Map of Tamilnadu

Friday, October 29, 2010

வெங்காயச் சட்னி / காரச் சட்னி

தேர்வுகள் அனைத்தும் இனிதே முடிவடைந்தன அல்லவா??
 
சுறுசுறுப்பான நெஞ்சங்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமே? இளம் பெண்களாக இருக்கும் நீங்கள் ஏன் சமையல் செய்து பழகக் கூடாது? இதோ! ஓர் எளிய சட்னி செய்முறை :
 
** பிடித்திருந்தால் சொல்லுங்களேன், இன்னும் பற்பல சமையல் குறிப்புகளை தயாரிக்கிறேன்!


தேவையான பொருட்கள் 
2  தக்காளி 
2  பெரிய வெங்காயம்  
2  பச்சை மிளகாய்
3  சிவப்பு மிளகாய்
சிறிது புளி ( சுவைக்காக )
1 /2  தேக்கரண்டி பெருங்காயத்தூள்
சிறிது நல்லெண்ணெய்
1  தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பு
1  தேக்கரண்டி கடுகு
1  தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
1  கொத்து கறிவேப்பிலை
1  மேசைக்கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை
* தக்காளி மற்றும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
* தீயில் வைத்த ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றவும்
* முதலில் வெங்காயம், பின் பெருங்காயம், பின் தக்காளி, பின் மிளகாய்கள் அனைத்தையும் மற்றும் எஞ்சிய பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்கவும்.  
* இவை அனைத்தும் முக்கால் பதம் வெந்தவுடன் தீயில் இருந்து இறக்கி, சற்று ஆற விடவும்.
* ஆரிய கலவையை எடுத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அல்லது நைசாக ( உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ) அரைத்து எடுக்கவும்.
* இறுதியாக தாளிப்புவகைகளை தாளித்து சட்னியில் கொட்டி நன்றாகக் கிளறி தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும்.


* மேதுவடையுடன் தொட்டுச் சாப்பிட்டாலும் இது பிரமாதம்தான்!

Wednesday, October 27, 2010

p5 htl sa2 2010 answers for compre

( 1 ).   இன்று பூண்டு  அசைவ உணவுகளிலும்,( 1 ) காய்கறிகளிலும் ( 1  ) இன்னும் மற்ற சாப்பாட்டு வகைகளிலும் (1 ) சேர்த்து சமைக்க உதவுகிறது.
 
( 2 ) மல்லர்களும் போர் வீரர்களும் பூண்டை வெங்காயத்துடன் கோத்து (1  )  மாலைகளாக அணிந்து ( 1 ) செல்வர்
 
( 3 ) அவர்கள் அந்த மாலைகள் ஒரு தாயத்தைப் போல ( .5 ) அவர்களைக் காக்கும் (.5  ) என்று நம்பியதோடு, பூண்ட அரைத்து காயத்தின் மேல் பூசினால் ( 1 ) அவற்றை விரைவில் ஆற்றிவிடும் (  1) என்று எண்ணியதால் அவர்கள் அவ்வாறு செய்யக் காரணம் ஆகும். 
 
( 4 ) பூண்டினை வெறுத்த எகிப்திய மத குருக்கள் அது உடம்புக்கு நல்லது என்றதாலும்,( 1 )   விலை மலிவானது என்பதாலும் ( 1 )  போர்க்களங்கில் வீரர்களுக்கும் அடிமைகளுக்கும் உண்ணக் கொடுத்தனர்.   ( 1 )  
 
( 5 ) பூண்டு முதன் முதலில் மத்திய ஆசியாவின் ( 1 ) அல்ட்டாய், தியன்ஷன்  என்னும் மலைத் தொடர்களுக்கு  ( 1 ) இடையே உள்ள பள்ளத்தாக்கில் ( 1 )  தோன்றியது.  
 
( 6 ) இன்று இந்தியாவில் பூண்டு வாயுத் தொல்லையைப் போக்கும் மருந்தாகவும், ( 1 ) ஜீரண சக்தியைக் கூட்டும் உணவாகவும் கருதப்படுவதோடு, ( 1 ) குடலில் உள்ள புழுக்களையும் நீக்கும் பொருளாகவும்( 1 )  பயன்படுத்திவரப்படுகிறது.  
 
சீக்கிரமாக - விரைவாக வேகமாக
போக்கும் - அகற்றும் நீக்கும்

Sunday, October 24, 2010

கொவ்வைப்பழம்


இவற்றுக்குப் பெயர்தா கொவ்வைப்பழம். சினத்தால் அவள் கண்கள் கொவ்வைப்பழம்போல சிவந்தது என்று நீங்கள் கேட்டு இருப்பீர்கள் அல்லவா? இந்த கொவ்வைப்பழத்தின் நிறத்தைப் பாருங்கள்! 




Sunday, October 10, 2010

வாக்கியங்களை முடித்து எழுதுக ( விடைகள் )

 
1 . மீனவர்கள் தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான
மீன்களைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி _________________.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எண்ணம்.


2 . ஆசிரியர் தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்றே விரும்பினார்.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் ______________.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம்.

3 . இன்றைய இளைய நடிகர்களின் விருப்பம் சிறார்கள் படித்து முன்னேற வரவேண்டும் என்பதே ஆகும்.

இன்றைய இளைய நடிகர்கள் _______________. 

இன்றைய இளைய நடிகர்கள் சிறார்கள் படித்து முன்னேறி வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+

1. அப்பாவுக்கு அம்மா சமைக்கும் பிரியாணியை உண்ண மிகவும் விருப்பம்.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை ____________.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை
உண்ண மிகவும் விரும்புவார்.



2. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாணவர்கள் கருத்தூன்றிப் படித்தனர்.

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் _______________. 

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் மாணவர்களால் கருத்தூன்றிப் படிக்கப்பட்டது.


3. சிறு பிள்ளைகள் கசப்பான மருந்தினை வெறுக்கிறார்கள்.

கசப்பான மருந்து ________________.

கசப்பான மருந்து சிறு பிள்ளைகளால் வெறுக்கப்படுகிறது.

~+~+~+~+~+~+~+~+~+~


1. சிலந்தி பலமுறை முயற்சி செய்து வலையைப் பின்னி முடித்தது.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை _______________.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை முயற்சி செய்தது.

2. முகுந்தன் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிழ்விக்க கடுமையாக உழைத்தான்.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் _______________.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிழ்விப்பதற்கே ஆகும்.



3. சரியான உணவு உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ______________.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சரியான உணவை உட்கொள்ள வேண்டும். / உட்கொள்வது உதவும்-உதவுகிறது (1ma )

~+~+~+~+~+~+~+~+~+~

1. கேள்விகளைச் சரியாகப் படிக்காததால் மாதவன் தவறான விடையை அளித்தான்.

மாதவன் தவறான விடையை அளித்ததற்கு ____________.

மாதவன் தவறான விடையை அளித்ததற்கு அவன் கேள்விகளைச் சரியாக படிக்காததே காரணம் ஆகும்.

2. புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுவதற்கு முன்னாள் அமைச்சர் கொலையுண்டதே காரணம் ஆகும்.

முன்னாள்  அமைச்சர் கொலையுண்டதால் _____________.

முன்னாள் அமைச்சர் கொலையுண்டதால் புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுகிறது.


3. இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் தமிழர்களுக்கு தனி பெருமை.

தமிழர்களுக்கு தனி பெருமை கிடைக்க ______________.

தமிழர்களுக்குத் தனி பெருமை கிடைக்க இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்குவதே காரணம் ஆகும்.

Friday, October 8, 2010

வாய்மொழித் தேர்வுகளில் பட உரையாடல்

வாய்மொழித் தேர்வுகளில் ஓர் அளவு வாசித்தல் குறித்து பார்த்துவிட்டோம். அடுத்த பகுதியான பட உரையாடலை எவ்வாறு அணுகுவது? அது குறித்து நாம் இந்தப் பதிவில் காணலாமா? :) 
( Tip :  படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் CLICK செய்யவும். ;)  )
1. முதலில் - ஒரு படத்தைக் காணும் போது, அந்தப் படம் எத்தனைப் பற்றியது, எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதனை மனதிற்கொள்ளவேண்டும். அதனை உரையாடல் துவங்கும் போதும் ஆசிரியரிடம் கூறிவிடவேண்டும்.


2. அடுத்து, படத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதனை விரைவாக ஒரு முறை நோட்டம் போட்டு விடுங்கள். அதே சமயம், மனதில் பொருட்களின் பெயர்களை சொல்லிப் பாருங்கள்..

more coming - blog entry under construction. pls practise with the pictures found below. :p

வாக்கியங்களை முடித்து எழுதுக. ( ~ Exercises for Pri HTL and Sec School Tamil ~ )

1 . மீனவர்கள் தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான
மீன்களைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி _________________.


2 . ஆசிரியர் தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்றே விரும்பினார்.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் ______________.


3 . இன்றைய இளைய நடிகர்களின் விருப்பம் சிறார்கள் படித்து முன்னேற வரவேண்டும் என்பதே ஆகும்.

இன்றைய இளைய நடிகர்கள் _______________. 

~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+

1. அப்பாவுக்கு அம்மா சமைக்கும் பிரியாணியை உண்ண மிகவும் விருப்பம்.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை ____________.


2. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாணவர்கள் கருத்தூன்றிப் படித்தனர்.

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் _______________. 


3. சிறு பிள்ளைகள் கசப்பான மருந்தினை வெறுக்கிறார்கள்.

கசப்பான மருந்து ________________.

~+~+~+~+~+~+~+~+~+~


1. சிலந்தி பலமுறை முயற்சி செய்து வலையைப் பின்னி முடித்தது.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை _______________.


2. முகுந்தன் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிவிக்க கடுமையாக உழைத்தான்.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் _______________.


3. சரியான உணவு உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ______________.

~+~+~+~+~+~+~+~+~+~

1. கேள்விகளைச் சரியாகப் படிக்காததால் மாதவன் தவறான விடையை அளித்தான்.
மாதவன் தவறான விடையை அளித்ததற்கு ____________.
2. புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுவதற்கு முன்னால் அமைச்சர் கொலையுண்டதே காரணம் ஆகும்.
முன்னால் அமைச்சர் கொலையுண்டதால் _____________.
3. இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் தமிழர்களுக்கு தனி பெருமை.
தமிழர்களுக்கு தனி பெருமை கிடைக்க ______________.

Thursday, October 7, 2010

வாய்மொழித் தேர்வு - உரையாடல் பகுதி

 நீங்கள் பார்த்துப் பேசி பயிற்சி பெற சில படங்கள்!  




Wednesday, October 6, 2010

Continuation of "வாசித்தல் எப்படி?"

மாணவர்களே.. நீங்க வாசித்தல் எப்படி? என்ற பதிவினை மீண்டும் சென்று காணலாம், இன்னும் அதிகப் படியான செய்திகள் போட்டு இருக்கிறேன். :)