Map of Tamilnadu

Sunday, January 23, 2011

தமிழ்நாட்டுச் சுற்றுலாத் தளங்கள் - மகாபலிபுரம், வள்ளுவர் கோட்டம், புதுச்சேரி,மெரீனா கடற்கரை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் வழங்கப்படுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது.

~~~~~~~~~~~~~~~~~

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

சிற்பத் தேர்
தேரில் உள்ள திருக்குறள் கருத்துக்களை விளக்கும் சிற்பங்கள்
இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.
தேரின் சக்கரங்கள். அவற்றில் அளவை அருகில் நிற்கும் மனிதர்களின் உயரத்துடன் ஒப்பிட்டுக் காண்க.
இத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

[தொகு] அரங்கம்

அரங்கத்தின் வாயில். வேயாமாடம் என அழைக்கப்படும் கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மேற்பகுதியை வாயிலின் இரு புறமும் காணலாம்
220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதுச்சேரி எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த நடுவண் அரசின் பிரதேசமாகும்.இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெரீனா கடற்கரையை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படம். அருகில் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சமாதிகள்
மெரீனா கடற்கரை (Marina beach) உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
Marina Beach.jpg

Wednesday, January 12, 2011

Tamilosai P6A - Payirchi 1.2 vidaigal

அ. செய்தித்தாளில் சுந்தரம் அண்மையில் நடந்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒரு சிறுகதையைப் படித்தார். 
 
ஆ. சுந்தரம் செய்தித்தாள் அலுவலகத்தில் பணிபுரியும் தன நண்பரிடமிருந்து எழுத்தாளரின் விவரங்களைத் தெரிந்து கொண்டு அவரிடம் தொடர்பு கொண்டார்.
 
இ. கார்த்திகேயன் வகுப்பில் தினமும் கட்டுரைப்பாடம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருந்த ஒரு வித்தியாசமான மாணவனாக இருந்ததால் சுந்தரம் அவனை நினைவில் வைத்துக்கொண்டிருந்தார்.
 
ஈ. மாணவன் எழுதிக்கொடுத்தவற்றைத் தினமும் திருத்திக்கொடுத்ததொடு, மேலும் சிறப்பாக எழுதுவதற்கு வழிகாட்டி ஆசிரியர் அவனுக்கு  உதவி புரிந்திருக்கிறார்.
 
உ. சுந்தரம் தம் மாணவன் சிறந்த எழுத்தாளன் ஆவேன் என்று சொன்னபடியே ஆனதாலும் அவன் போட்டியில் முதல் பரிசை வென்றதாலும் கார்த்திகேயனைத் தம் மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைந்தார்.