ராமன் பசித்து வந்தவர்களுக்கு உணவு கொடுப்பதையும், உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவுவதையும் தன் வாழ்வில் கடைபிடித்து வந்தான்.
அவர்கள் இருவரும் ஒரே குணத்தை உடையவர்களாக இருந்ததால் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.
தீபாவளியின் பொழுது அவனுக்குத் துணிகள் தைப்பதற்கு அதிகமாக இருந்ததால் அவனால் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடமுடியவில்லை.
ராமன் கொடுத்த உணவில் இருந்த மீன் முள் முதியவரின் தொண்டையில் சிக்கிக்கொண்டு அவர் இறந்ததே அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையாகும்.
அந்த நாட்டின் சட்டப்படி, ஒருவரது மரணத்திற்கு ஒருவர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ராமன் கொடுத்த உணவைச் சாப்பிட்டு முதியவர் இறந்ததால் ராமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவிருந்ததே அவனுக்கு நேர்ந்த பிரச்சினையாகும்.
மருதுவர் முதியவர் நெஞ்சுவலியுடன் தன் வீட்டிற்கு சென்றதால் நெஞ்சுவலியால் இறந்தார் என்று அதிகாரிகளிடம் கூறி புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்.
No comments:
Post a Comment