தொடக்கநிலை மூன்று மற்றும் நான்கு மாணவர்களே!
உங்களுக்கு வெகு விரைவில் கட்டுரைத் தேர்வு வரப் போகிறது அல்லவா? அதனால் நான் இங்கு இரண்டு கட்டுரைப் படங்களும், அவற்றுக்கான மாதிரிக் கட்டுரைகளையும் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அவற்றைப் படித்துப் பார்த்து ஒருவாறு அதே போல எழுத முயலுங்கள்.
உங்கள் கட்டுரைத் தேர்வுக்காக எங்களது வாழ்த்துக்கள்!
உதவிச் சொற்கள்
புத்தகக்கடைக்கு விதவிதமான கூட்டமாக தேர்ந்தெடுப்பதில்
ஆர்வமாக காணவில்லை உணர்ந்ததும் பதறினான் தகவல் பிரிவிற்கு
அறிவித்தார் ஓடோடி வந்தான் கட்டி அணைத்தான்
தம்பி எங்கே?
கணேஷ் அவனது தம்பி முருகனோடு புத்தகக் கடைக்குச் சென்றான். கணேஷ் பெரியவன். அவன் தம்பியோ இப்போதுதான் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அண்ணன் விதவிதமான புத்தகம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் தம்பி வேறு இடம் செல்ல விரும்பினான். ( 26 சொற்கள் )
கணேஷ் புத்தகம் தேர்ந்தெடுப்பதில் மூழ்கி இருக்கும் பொது முருகன் அவனைவிட்டு சென்றுவிட்டான். திடீரென்று தம்பியைக் காணவில்லை என்று அண்ணன் உணர்ந்தான். அதனால் அண்ணனுடைய மனம் பெரிதும் பதறியது. ( 20 சொற்கள் )
கணேஷ் உடனே தகவல் பிரிவிற்கு சென்றான். அங்கே அவன் இருக்கும் அறிவிப்பாளரிடம் நடந்தவற்றைக் கூறினான். அவரும் முருகன் காணவில்லை என்பதைப் பற்றி அறிவிப்பு கூறினார். ( 18 சொற்கள் )
அறிவிப்பைக் கேட்ட முருகன் ஓடோடி வந்தான். அவனைக் கண்ட கணேஷின் மனம் நிம்மதி அடைந்தது! அவன் தன் தம்பியைக் கட்டி அணைத்தான். ( 16 சொற்கள் )
No comments:
Post a Comment