Map of Tamilnadu

Tuesday, April 26, 2011

இனிய வாக்கியம் / அழகிய சொற்கள்

 
மாணவர்களே!

 
நீங்கள் ஒரு கட்டுரையை எழுத நினைக்கும்
பொழுது, அந்தக் கட்டுரை மிகவும் இனிமையாகவும்
அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால்,
சில இனிய வாக்கியம் அல்லது அழகிய சொற்களை
உங்களது கட்டுரைகளில் சேர்க்கலாம்!

 
இனிய வாக்கியம், அல்லது அழகிய சொற்கள்
என்று கூறினால் ஒரு மனிதனையோ,
பொருளையோ அல்லது ஒரு காட்சியையோ
அழகாக வருணிக்கும் தன்மை உடையது என்பது
பொருள்.

 
That is  - they are phrases or words that describe a person, thing or scenery in a very pleasant or descriptive manner!




1.  வண்டுகளும் தேனீக்களும் மலர்களைச் சுற்றி ரீங்காரமிடும் மயக்கும் மாலைப் பொழுது!

2. சூரியன் தன் வேலையைச் செவ்வனே செய்து முடித்து சற்று ஒய்வு எடுக்க மேற்கே சாய்ந்தான்!

3. மழைத்துளிகள் சடசடவென பெரிய தூறல்களாக விண்ணிலிருந்து மண்ணை நோக்கிப் பாய்ந்தன!

4. அச்செய்தியைக் கேட்டு மின்னலென பாய்ந்து அந்த இடத்தை அடைந்தான்!

5. இரக்கமும் ஈகையும் அவன் மனதை ஊடுருவ, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தான்!

6. பயம் என்னும் பேய் அவன் மனத்தைக் கௌவிக்கொண்டது!

7. அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென உருண்டோடி, அவள் எண்ணங்களை உலகிற்கு பறை சாற்றியது!

1 comment: