Map of Tamilnadu

Thursday, April 28, 2011

மாதிரிக் கட்டுரைகள் இரண்டு - 2

தொடக்கநிலை மூன்று மற்றும் நான்கு மாணவர்களே!
உங்களுக்கு வெகு விரைவில் கட்டுரைத் தேர்வு வரப் போகிறது அல்லவா? அதனால் நான் இங்கு இரண்டு கட்டுரைப் படங்களும், அவற்றுக்கான மாதிரிக் கட்டுரைகளையும் கொடுத்திருக்கிறேன்.  நீங்கள் அவற்றைப் படித்துப் பார்த்து ஒருவாறு அதே போல எழுத முயலுங்கள்.
உங்கள் கட்டுரைத் தேர்வுக்காக எங்களது வாழ்த்துக்கள்!
உதவிச் சொற்கள்
சமைத்துகொண்டிருந்தார்        தொலைபேசி ஒலித்தது    நீண்ட நேரம்  திடீரென்று      அலறல் சத்தம்
சமையலறையை நோக்கி தரையில் விழுந்து ரத்தம் கசிந்தது கை தவறி அவசரச் சிகிச்சை பிரிவிற்கு
கட்டுப் போட்டார்
எதிர்பாராத சம்பவம்
அம்மா ஒரு நாள் சமையலறையில் காய்கறிகள் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது தொலைபேசிமணி ஒலித்தது. அம்மா காய்கறிகளை வைத்துவிட்டு தொலைபேசியை எடுக்க சென்றார்.
( 14  சொற்கள் )
அம்மாவின் தோழி தொலைபேசியில் அவரை அழைத்திருந்தார்.  அம்மாவும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சமையலறையில் அவர் கட்டியை மேசையில் வைத்திருந்ததைப் பற்றி அவர் மறந்துவிட்டார். திடீரென்று அங்கு அலறல் சத்தம் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்துவிட்டு சமையலறையை நோக்கி ஓடினார். ( 29  சொற்கள் )
அங்கே அவர் தம்பி தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார். தம்பி மேசையில் இருந்த கத்தியை எடுத்திருக்கிறான். அவன் அதைக் கைதவறி கீழே போட்டுவிட்டான். அந்தக் கத்தி அவன் காலில் பட்டு ரத்தம் கசிந்தது. (  24 சொற்கள் )
அம்மா தம்பியை அவசரச் சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் அவனை பரிசோதித்து அவனுடைய காலில் கட்டு போட்டார். இது அம்மாவுக்கும் தம்பிக்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்தது! 
(   22 சொற்கள் )

No comments:

Post a Comment