Map of Tamilnadu

Tuesday, June 28, 2011

கட்டுரை எழுதுவது எப்படி?

1 . முதல் படி - முன்னுரை
 
உங்கள் கதை எதைப் பற்றியதாக இருக்கும் என்பதற்கான அடிப்படையை நீங்கள் இங்கே கொடுக்கலாம்! 
* என்ன நேரம்?
* என்ன சூழ்நிலை?
* யார் நிலையிலிருந்து கட்டுரை வருகிறது?

எ-கா : -
அப்போது மாலை நேரத் தென்றல் மிகவும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. செடிகளில் பூத்துக்குளுங்கிக்கொண்டிருந்த மலர்கள் இலைதழைகளோடு சேர்ந்து தலை அசைத்துக்கொண்டு நடனம் ஆடின. அது மட்டுமா? அவற்றின் நறுமணமும் காற்றோடு சேர்ந்து கலந்து அப்பூங்கா எங்கும் பரவிக்கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது. 


=  மாலை நேரத்தில், ராமு என்ற பையன் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கிறான், அவன் துன்பங்களை 
மறப்பதற்காக பூங்காவில் காற்று வாங்குகிறான்!  பின்னர் என்ன நடக்கிறது?
 
 
2 . இரண்டாம் படி - கட்டுரை வளர்ச்சி
* ராமுவுக்கு என்ன கஷ்டம்?
* அது, அவை எதனால், யாரால், எப்படி உண்டானது?
* அவற்றைச் சமாளிக்க ராமு என்ன செய்தான்? யாராவது உதவி செய்தார்களா?
* இறுதியில் என்ன நடந்தது? ராமு கஷ்டங்களிலிருந்து விடிக்கப்பட்டானா? இல்லையா?
 
 
3 . மூன்றாம் படி -  முடிவு
* இறுதியில் ராமுவுக்கு மன நிலை எப்படி இருந்தது?
* இச்சம்பவத்திலிருந்து ராமு என்ன கற்றுக்கொண்டான்?

 
 சரி... இப்போது, நீங்கள் இந்தத் தொடக்கத்தை  வைத்துக் கொண்டு எனக்கு ஒரு கதையை எழுதிக் காட்டுங்கள் பார்க்கலாம்.
கதை அல்லது கட்டுரை எழுதும் பொழுது, நீங்கள் அழகிய சொற்கள், இனிய வாக்கியம், பழமொழிகள், திருக்குறள் அனைத்தும் புகுத்தி எழுத மறக்க வேண்டாம்!

P6 - CCKPS 2011 மாணவர்கள் கவனத்திற்கு: இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டாலும், இதற்கு நீங்கள் தயார் படுத்திக் கொண்டு வரலாமே ஒழிய கதை வீட்டிலேயே எழுதக் கூடாது! இது வியாழன் 30/6/2011 அன்று காலையில் நீங்கள் வகுப்பில்  செய்யக் கூடிய வேலை ஆகும். :)

1 comment:

  1. Madam please said your mail id...........

    ReplyDelete