Map of Tamilnadu

Thursday, September 23, 2010

கட்டுரை: நினைவில் கொள்ள வேண்டியவை!

1. சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள், ( p5 and p6 pupils ) தயவு செய்து படக் கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும்! ONLY only OnLy ~ picture compositions, DO YOU UNDERSTAND!?!?!

 

2. படங்களை நன்றாகப் பார்த்தவுடன் உதவிச் சொற்களை படித்து புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் உதவிச் சொற்கள் சில முக்கிய தகவல்களைக் கொடுக்கக்கூடும்.


3. கட்டளை வாக்கியத்தில் எத்தனை சொற்கள் எழுதக் கேட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள் அந்த எண்ணிக்கைக்கு 10 % அதிகமாகவோ, குறைவாகவோ எழுதினாலே போதுமானது.( For eg, if they ask you to write 90 words, you can write 81 - 99 words. This info is for MA pupils)

 

4. நன்றாக / சிறப்பாக எழுதக் கூடிய மாணவர்கள் காலம் கருதி எழுத முடிந்ததை எழுதிக் கொடுத்தல் நன்று. So remember to plan your time properly. I will NOT be there to remind you! - esp my HTL pupils.

 

5. கட்டுரை எழுதும் போது, ஒரு சில இடங்களில் அழகிய சொற்கள், இனிய வாக்கியங்கள் எழுதுவது கட்டுரையின் தரத்தைக் கூட்டும். ஆனால், ஒவ்வொரு பத்தியிலும் இவற்றைத் திணித்து எழுதினாலும் நன்றாக இராது! சுமார் நூறு சொற்கள் கொண்ட கட்டுரைக்கு நான்கு அல்லது ஐந்து இனிய வாக்கியங்கள் இருந்தாலே மிகவும் நன்று, அத்துடன் அது போதுமானதும் கூட.௦


6. காலை நேரத்தை பற்றி எழுதும் போது " சூரியன் தன் பொன் கரங்களை விரித்து தரணியெங்கும் ஒளி பரப்பிக் கொண்டிருந்த வேளை" என்று எழுத முடிந்தால் மிகவும் சிறப்பு. இருப்பினும், "என்றும் போல அன்றும் பொழுது புலர்ந்தது! முகுந்தன் தன காலைக் கடன்களைச் செவ்வனே செய்து முடித்தான்" என்று எழுதினாலும் சாலச் சிறந்ததே! ( Its short and sweet!)

 

7. இத்துடன் ஆங்காங்கே உங்களால் திருக்குறள்களில் ஏதேனும் ஒன்றினை கட்டுரைக்கு ஏற்றாற்போல அமையும் வண்ணம் தொடக்கத்திலோ, முடிவிலோ புகுத்த முடியும் என்றால், chance - ஏ இல்லை! கொன்னுடுவீங்க!

எடுத்துக்காட்டாக : " தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது" என்பது தெய்வப் புலவரின் போய்யாமொழியாகும்! இக்குறளைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது!


என்றும் போல அன்றும் பொழுது புலர்ந்தது! வள்ளி விடியலில் எழுந்து தன் காலைக் கடன்களைச் செவ்வனே செய்து முடித்து பள்ளிக்குக் கிளம்பினாள்........"



 இன்னும் திருக்குறள் படிக்காத சிறுவர்கள் : நீங்கள் பழமொழிகளையும் கூட பயன்படுத்தலாம்! எடுத்துக்காட்டாக -  " அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்" என்பது நம் முன்னோர் கூறிய முதுமொழி!  என்று நீங்கள் தொடங்கலாம்.


இவற்றைக் காட்டிலும் வேறு ஏதேனும் இருந்தால் , நினைவுக்கு வந்தால் நான் மேலும் இங்கு புகுத்தப் பார்க்கிறேன். so , மாணவ மணிகளே, என் மழலைச் செல்வங்களே - watch this space !


4 comments: