Map of Tamilnadu

Sunday, September 26, 2010

வாசித்தல் எப்படி?

மாணவ மணிகளே! உங்களுக்கு விரைவில் வாய்மொழித் தேர்வு வரப் போகிறது அல்லவா?? படத்தைப் பார்த்து நன்றாகப்   பேசிவிட்டு மதிப்பெண்கள் பெறும் கூட்டம் ஒரு பக்கம்! ஆனால் ஒரு சிலருக்குப் படத்தைச் சரிவர விவரிக்கத் தெரியாத நிலையில் வாசித்தல் பெரும் உதவி புரிய வல்லதாக இருக்கும்.

ஓர் எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பகுதியினைக் காணவும் :

ஒரு நாள் / சுந்தர் மளிகைக் கடைக்குச் / சென்றார். / கடைக்காரரிடம் / ஒரு மூட்டை அரிசியின் விலை என்ன / என்பது பற்றிச் / சுந்தர் விசாரித்தார். கடைக்காரர்,/ " ஒரு மூட்டை அரிசியின் விலை / ஐம்பது வெள்ளி, "/ என்று கூறினார்./ சுந்தர் / கடைக்காரரை ஏமாற்ற / எண்ணினார்./ அவர் உடனே, / "என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? / சென்ற வாரம் / நான் உங்கள் கடையில் அரிசி,/ பருப்பு,/ மிளகாய்,/ புளி எல்லாம் / வாங்கினேன். / அப்போது / உங்களது தம்பிதான் / கடையில் இருந்தார்./ அவர் / ஒரு மூட்டை அரிசி / நாப்பத்தைந்து வெள்ளி / என்று விற்றார்,"/  என்று கூறினார். /

இங்கு நான் சில இடங்களில் " / " என்ற குறியீட்டினைச் சேர்த்து இருக்கிறேன். பகுதியைப் படித்துப் பார்க்கும்போது " / " என்று காணும் இடங்களில் நீங்கள் சற்று நிறுத்தி படித்துப் பாருங்கள்; நீங்கள் படிப்பதில் ஓர் ஏற்ற இறக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இப்போது வேறு ஒரு பகுதியை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதனை நீங்கள் வழக்கம் போல படித்துப் பாருங்கள். சற்று முன்பு நீங்கள் படித்த பொழுது கிடைத்த ஏற்ற இறக்கம் வருகிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஏற்ற இறக்கம் வந்தால் மிக நன்று. ஆனால் உங்களுக்கு வராவிட்டால் கவலை வேண்டாம்!
நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதியில் நீங்களே " / " என்று குறியீடு போட்டுக்கொண்டு மீண்டும் படித்துப் பாருங்கள். இப்போது ஏற்ற இறக்குத்துடன் படிக்க முடிகிறதா என்று பாருங்கள். வந்திருக்குமே? .... அது!
சரி... " / " குறியை எங்கே போடுவது?? ஏதாவது formula உண்டா?? உண்டு... அதனை next மீட் பண்ணும் பொது சொல்கிறேன்.. மீண்டும் மீண்டும்  வந்து Check செய்யவும்!

~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~

7 Oct 2010

ஒரு நாள் / சுந்தர் மளிகைக் கடைக்குச் / சென்றார். / கடைக்காரரிடம் / ஒரு மூட்டை அரிசியின் விலை என்ன / என்பது பற்றிச் / சுந்தர் விசாரித்தார். கடைக்காரர்,/ " ஒரு மூட்டை அரிசியின் விலை / ஐம்பது வெள்ளி, "/ என்று கூறினார்./ சுந்தர் / கடைக்காரரை ஏமாற்ற / எண்ணினார்./ அவர் உடனே, / "என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? / சென்ற வாரம் / நான் உங்கள் கடையில் அரிசி,/ பருப்பு,/ மிளகாய்,/ புளி எல்லாம் / வாங்கினேன். / அப்போது / உங்களது தம்பிதான் / கடையில் இருந்தார்./ அவர் / ஒரு மூட்டை அரிசி / நாப்பத்தைந்து வெள்ளி / என்று விற்றார்,"/  என்று கூறினார். /
* ஒரு கதை சொல்லும்போது ஆரம்பத்தில், "ஒரு நாள்" அல்லது " ஒரு ஊரில்" என்று வரும் இடத்தில் "/" போடவேண்டும்.

* வேற்றுமை உருபு "கு" வந்த பிறகு வினை முற்று வந்தால், "கு" இடம் பெற்ற சொல்லுக்குப் பிறகு "/"
போடவேண்டும்.

* வேற்றுமை உருபு " இடம்" வந்த பிறகு, "/" போடவேண்டும்.

* கேள்விச் சொற்கள் , ( என்ன, எவை, எது, ஏன், எப்படி, எங்கே, எவ்வாறு, யார், யாவை, யாவர்)  வந்த பிறகு "/" போடவேண்டும். அதே போல "?" வந்தாலும் "/" போடவேண்டும்.

* "," அல்லது ";" போன்ற குறிகளுக்குப் பின் "/" போடவேண்டும் ; முற்றுப்புள்ளி, - "." , ஆச்சரியக்குறி, - "!" ஆகியவற்றுக்குப்பின்னாலும் "/" கட்டாயம் போடவேண்டும்.

* வினை எச்சத்திற்குப்பிறகு "/" போடவேண்டும்.

எடு-கா: தூங்கி எழுந்தான்.  படித்து மகிழ்ந்தான். விழுந்து அழுதான்.

No comments:

Post a Comment