Map of Tamilnadu

Thursday, September 23, 2010

கட்டுரை சூழ்நிலைகள்

பூங்காவில் எவற்றைக் காணலாம்?
* மரம், செடி, கொடி...
* பூச்செடிகள், பூக்கள், வண்டுகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள்
* விளையாட்டுச் சாதனங்கள் -
மேல் கீழ் ஆட்டப் பலகைகள் , ஊஞ்சல்கள் , சருக்குகள்  
* முதியவர்கள், சிறார்கள், பெற்றோர், நண்பர்கள், சிறுமிகள், சிறுவர்கள்

பூங்காவில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
* திடீரென்று மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு.
* வண்டுகள் அல்லது தேனீக்கள் சிறார்களைக் கொட்ட அல்லது கடிக்க வாய்ப்பு உண்டு
* குழந்தை பட்டாம்பூச்சியைத் துரத்தி ஓடும்போது கீழே விழுந்திட வாய்ப்பு உண்டு ;  அதே போல சாலைக்கு ஓடிட வாய்ப்பு உண்டு, - இதனால் சாலை விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
* சிறுவர்கள் சண்டை போட வாய்ப்பு உண்டு, அவர்களுக்கு பெற்றோர் அல்லது முதியவர்கள் அறிவுரை கூறலாம்

~*~*~*~*~*~*~

பள்ளி உணவகத்தில் எவற்றைக் காணலாம்?
* நீண்ட மேசைகள், இருக்கைகள்
* உணவுக் கடைகள், மாணவர்கள் அவற்றுக்கு முன் வரிசையில் நிற்பது
* சட்டாம்பிள்ளைகள், ஆசிரியர்கள் 
* பொதுத் தொலைபேசிகள் 
* அறிவிப்புகள் , அறிவிப்புப் பலகைகள் , புத்தகம் விற்க வந்திருப்போர்  
பள்ளி உணவகத்தில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
*  வரிசையில் நிற்கும் மாணவர்களிடையே சண்டை 
* ஓடும் மாணவன் உணவுப் பொருட்களை தட்டிவிடுதல், சூடான உணவுப் பொருட்கள் கீழே சிந்துதல், பிற மாணவர்களுக்கு அடி படுதல்  
* அருகில் உள்ள திடலுக்கு விளையாடச் செல்லுதல்
* விளையாட்டுத் திடலில் கீழே விழுந்து கை அல்லது கால்களில் அடி படலாம்.
* விளையாட்டுத் திடலில் பாம்பு வரலாம்!
* விளையாட்டுத் திடலில் பணப் பை கண்டு எடுக்கலாம் அல்லது பணப் பையை தொலைக்கலாம். அந்தப் பணப் பையை நண்பன் கண்டு எடுக்கலாம்

~*~*~*~*~*~*~
 
வகுப்பறையில் எவற்றைக் காணலாம்?
* மேசை நாற்காலி, வெண்பலகை, ஆசிரியரின் கணினி, சன்னல்கள், குப்பைத்தொட்டி, அலமாரிகள், அறிவிப்புப்பலகைகள்.
* மாணவர்கள் அமைதியாகப் படிப்பது, மாணவர்கள் சட்டம் போட்டு ஆரவாரம் செய்வது, ஆசிரியர் வகுப்பைக் கட்டுப்பாட்டுடன் வைக்கமுடியாமல் இருப்பது அல்லது கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது, ஆசிரியர் பாடம் நடத்தும் பொது வகுப்பின் பின்னால் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது.
* மாணவர்கள் வீட்டுப்ப்பாடத்தை வீட்டில் வைத்து விட்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
 
வகுப்பில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
* மாணவர்கள் ஓடி மேசை நாற்காலிகளில் மோதி விழுந்து அடி பட்டு இரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* ஆசிரியர் மாணவர்களைத் திட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* இரைச்சலான வகுப்பைக் காண பக்கத்து அரை ஆசிரியரோ, பள்ளி முதல்வரோ, துணை முதல்வரோ வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* யாராவது ஒரு மாணவனின் வீட்டிலிருந்து பெற்றோர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

No comments:

Post a Comment