என் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே..
இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்!
Map of Tamilnadu
Thursday, September 23, 2010
COMPETITION!!
அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு!
இந்தச் செய்யுளை உங்களில் யார் சரியாக பொருள் கூறுகிறார் என்று ஒரு போட்டி வைப்போமா?
கொக்கு போல் பொறுமையுடன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, காலம் சரியாக வாய்க்கும் பொது கொக்கு குறிபார்த்து மீனை கொத்துவது போல நாமும் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.
கொக்கு போல் பொறுமையுடன் தக்க சமயத்திற்காக காத்திருந்து, காலம் சரியாக வாய்க்கும் பொது கொக்கு குறிபார்த்து மீனை கொத்துவது போல நாமும் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்.
ReplyDelete