இருட்டு கலைந்திட, விண்மீன்கள் நழுவிவிட, வானம் கலந்கலாகிவிட, விடியலின் அறிவிப்பாக பறவைகள் கூவிட, நான் தூக்கம் களைந்து துயில் எழுந்தேன். அந்த அழகிய நாள் அன்று, விடுமுறையை என் சிநேகிதர்களுடன் செலவழிக்க பாசிரீஸ் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டிருந்தோம்.
என் காலைக்கங்களை முடித்துவிட்டு நீச்சல் ஆடையையும் நொறுக்குத் தீனியையும் எடுத்துக்கொண்டு என் நண்பர்களைச் சந்திக்க பாசிரீஸ் பேரு விரைவு ரயில் நிலையத்திற்கு பேருந்தில் உற்சாகத்தோடு சென்றேன். அங்கே உயிர் தோழர்களைச் சந்தித்த பின்னர் கடற்கரைக்கு நடந்துச் சென்றோம்.
நடந்து கொண்டிருந்தபொழுது, சட்டென்று வானம் திடீர் மழைக்கு ஆயுத்தமாய் காணப்பட்டது. சின்ன சின்ன மழைத்துளிகள் விழத் துவங்கின. தூறல் மெல்ல மெல்ல தைரியமடைந்து மழையாகிக்கொண்டிருக்க, " பட்ட் பட்ட்" என்று ஆங்காங்கே விரிய, நாங்கள் அடுத்த வினாடியே மலையிலிருந்து தப்பிக்க ஒரு சமூக மன்றத்தின் முதல் மாடியில் அமர்ந்தோம்.
நேரமோ ஓடிக்கொண்டிருந்தே தான் இருந்தது! ஆனால் மழை விட அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. நாங்கள் செய்வதறியாமல் சோகக் கடலில் மூழ்கி இருந்தோம். எதிர்பாராமல் வந்த மழை விடாமல் தொடர்ந்து பெய்து கடற்கரைக்கு எங்களை செல்ல விடாமல் தொடர்ந்தது. மழையை எதிர்பாராத என் நண்பர்களின் அழகிய வதனம் பூப்போல் வாடியது. எங்கள் முகத்தில் சோகம் நிழலாடியது. நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்க ஆசையுடன் வந்த எங்களுக்கு சோகம் மட்டுமே மிஞ்சியது.
அப்போது எனக்கு ஓர் அற்புதமான யோசனை ஒன்று தோன்றியது. கடற்கரைக்கு சென்று பூப்பந்து விளையாடுவதற்குப் பதிலாக நாங்கள் அந்தச் சமூக மன்றத்திலேயே விளையாடலாம்
என்றுதிட்டமிட்டோம்! அவ்வாறே பூப்பந்து விளையாடிவிட்டு
விரைவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக
வீடு திரும்பினோம்.
என்றுதிட்டமிட்டோம்! அவ்வாறே பூப்பந்து விளையாடிவிட்டு
விரைவு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக
வீடு திரும்பினோம்.
No comments:
Post a Comment