மாணவர்களாகிய நீங்கள் கட்டுரை எழுதும் பொழுது மனத்தைக் கொள்ளைக் கொள்ளக் கூடிய சில நல்ல வாக்கியங்களை எழுதினால் உங்களது கட்டுரையின் தரம் கொஞ்சம் கூடும். நான் இதன் அடியில் சில சூழ்நிலைகளுக்கான நல்ல வாக்கியங்களை எப்படி புகுத்துவது என்று எழுதிக்காட்டுகிறேன்.
காலை நேரம்
காலை வெயில் இதமான சூடு. குளிர் இன்னும் குறைந்த பாடில்லை.
உடலில் லேசான நடுக்கம். தூக்கத்தை விட மனமில்லாமல் எழுந்த மாலா நேராகக் குளியல் அறைக் குழாயில் தன முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தாள். அப்போது காலை மணி ..... .
மாலை நேரம்
அப்போது மாலை நேரத் தென்றல் மிகவும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. செடிகளில் பூத்துக்குளுங்கிக்கொண்டிருந்த மலர்கள் இலைதழைகளோடு சேர்ந்து தலை அசைத்துக்கொண்டு நடனம் ஆடின. அது மட்டுமா? அவற்றின் நறுமணமும் காற்றோடு சேர்ந்து கலந்து அப்பூங்கா எங்கும் பரவிக்கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது. அல்லது
இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவுக்கு மேலும் அவனது இன்பங்களைக் கூட்டிக் கொடுத்தது போல இருந்தது! அல்லது
இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவினால் சற்றே அவனது கஷ்ட நஷ்டங்களை மறக்க முடிந்திருந்தது. அல்லது
இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமுவுக்கு மேலும் அவனது இன்பங்களைக் கூட்டிக் கொடுத்தது போல இருந்தது! அல்லது
இந்தச் சூழ்நிலையில் லயித்துப் போயிருந்த ராமு இயற்கை அன்னையின் அருமை பெருமைகளை எண்ணி பிரம்மித்துப் போயிருந்தான்!
மன உறுதி
மகாகவி பாரதி எத்தனை அழகாக சொல்லி இருக்கிறார்? தரணியில் மானிடராகப் பிறப்பது அரிது! நம் ஒருவரால்தான் பார்க்க முடியும், பேசமுடியும், பாடமுடியும், சிரிக்க முடியும், சிந்திக்க முடியும். ஆகவே, நாம் உயிருடன் இருக்கும்பொழுதே நம் மனதை உறுதிப்படுத்தி நமக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்தால் என்ன?
Keep watching this space!
No comments:
Post a Comment