ஆறாம் வகுப்பு உயர் தமிழ் மாணவர்கள் கவனத்திற்கு! என்னால் AskNLearn Portal-இல் பாடங்களைச் சேர்க்க முடியவில்லை. ஆதலால் நான் இந்தத் தளத்திலேயே பாடங்கள் கொடுக்கிறேன்! :(
தயவு செய்து நீங்கள் பாடங்களை ஒரு தாளில் எழுதி என்னிடம் கொடுத்துவிடுங்கள்.
1. அக்கா சமைத்த கறி தீய்ந்து போனதற்கு அவளுடைய கவனக்குறைவே காரணம் ஆகும்.
அக்கா கவனமாக இருந்திருந்தால் அவள் ________________________________________.
2. நாட்டிற்காக போராடும் சிப்பாய்களை நாட்டு மக்கள் மெச்சுகிறார்கள்.
நாட்டிற்காக போராடும் சிப்பாய்கள் _________________________________________.
3. மாணவர்கள் அவர்களது அனைத்து பாடங்களை ஒவ்வொரு நாளும் மீள்நோக்கம் செய்தால் தேர்வில் வெற்றி பெறுவார்.
தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் _________________________________________.
4. ஆசிரியர் தேர்வில் சிறப்பாக செய்த மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் சென்றார்.
ஆசிரியர் மாணவர்களைக் கேலிக்கைச் சந்தைக்கு அழைத்துச் செல்லக் காராணம் ___________________________________________.
5. இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் அவர்களது அடையாள எண்ணை மனப்பாடம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
இறுதியாண்டுத் தேர்வை எழுதும் மாணவர்கள் கட்டாயம் _______________________________________________.
No comments:
Post a Comment