Map of Tamilnadu

Thursday, April 28, 2011

மாதிரிக் கட்டுரைகள் இரண்டு – 1

தொடக்கநிலை மூன்று மற்றும் நான்கு மாணவர்களே!

உங்களுக்கு வெகு விரைவில் கட்டுரைத் தேர்வு வரப் போகிறது அல்லவா? அதனால் நான் இங்கு இரண்டு கட்டுரைப் படங்களும், அவற்றுக்கான மாதிரிக் கட்டுரைகளையும் கொடுத்திருக்கிறேன்.  நீங்கள் அவற்றைப் படித்துப் பார்த்து ஒருவாறு அதே போல எழுத முயலுங்கள்.

உங்கள் கட்டுரைத் தேர்வுக்காக எங்களது வாழ்த்துக்கள்!

உதவிச் சொற்கள்

புத்தகக்கடைக்கு விதவிதமான கூட்டமாக தேர்ந்தெடுப்பதில்
ஆர்வமாக காணவில்லை உணர்ந்ததும் பதறினான் தகவல் பிரிவிற்கு
அறிவித்தார் ஓடோடி வந்தான் கட்டி அணைத்தான்

தம்பி எங்கே?

கணேஷ் அவனது தம்பி முருகனோடு புத்தகக் கடைக்குச் சென்றான். கணேஷ் பெரியவன். அவன் தம்பியோ இப்போதுதான் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். அண்ணன் விதவிதமான புத்தகம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் தம்பி வேறு இடம் செல்ல விரும்பினான். (   26 சொற்கள் )

கணேஷ் புத்தகம் தேர்ந்தெடுப்பதில் மூழ்கி இருக்கும் பொது முருகன் அவனைவிட்டு சென்றுவிட்டான். திடீரென்று தம்பியைக் காணவில்லை என்று அண்ணன் உணர்ந்தான். அதனால் அண்ணனுடைய மனம் பெரிதும் பதறியது.  (  20 சொற்கள் )

கணேஷ் உடனே தகவல் பிரிவிற்கு சென்றான். அங்கே அவன் இருக்கும் அறிவிப்பாளரிடம் நடந்தவற்றைக் கூறினான். அவரும் முருகன் காணவில்லை என்பதைப் பற்றி அறிவிப்பு கூறினார். (  18 சொற்கள் )

அறிவிப்பைக் கேட்ட முருகன் ஓடோடி வந்தான். அவனைக் கண்ட கணேஷின் மனம் நிம்மதி அடைந்தது! அவன் தன் தம்பியைக் கட்டி அணைத்தான். (  16 சொற்கள் )


மாதிரிக் கட்டுரைகள் இரண்டு - 2

தொடக்கநிலை மூன்று மற்றும் நான்கு மாணவர்களே!
உங்களுக்கு வெகு விரைவில் கட்டுரைத் தேர்வு வரப் போகிறது அல்லவா? அதனால் நான் இங்கு இரண்டு கட்டுரைப் படங்களும், அவற்றுக்கான மாதிரிக் கட்டுரைகளையும் கொடுத்திருக்கிறேன்.  நீங்கள் அவற்றைப் படித்துப் பார்த்து ஒருவாறு அதே போல எழுத முயலுங்கள்.
உங்கள் கட்டுரைத் தேர்வுக்காக எங்களது வாழ்த்துக்கள்!
உதவிச் சொற்கள்
சமைத்துகொண்டிருந்தார்        தொலைபேசி ஒலித்தது    நீண்ட நேரம்  திடீரென்று      அலறல் சத்தம்
சமையலறையை நோக்கி தரையில் விழுந்து ரத்தம் கசிந்தது கை தவறி அவசரச் சிகிச்சை பிரிவிற்கு
கட்டுப் போட்டார்
எதிர்பாராத சம்பவம்
அம்மா ஒரு நாள் சமையலறையில் காய்கறிகள் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது தொலைபேசிமணி ஒலித்தது. அம்மா காய்கறிகளை வைத்துவிட்டு தொலைபேசியை எடுக்க சென்றார்.
( 14  சொற்கள் )
அம்மாவின் தோழி தொலைபேசியில் அவரை அழைத்திருந்தார்.  அம்மாவும் அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். சமையலறையில் அவர் கட்டியை மேசையில் வைத்திருந்ததைப் பற்றி அவர் மறந்துவிட்டார். திடீரென்று அங்கு அலறல் சத்தம் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்துவிட்டு சமையலறையை நோக்கி ஓடினார். ( 29  சொற்கள் )
அங்கே அவர் தம்பி தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார். தம்பி மேசையில் இருந்த கத்தியை எடுத்திருக்கிறான். அவன் அதைக் கைதவறி கீழே போட்டுவிட்டான். அந்தக் கத்தி அவன் காலில் பட்டு ரத்தம் கசிந்தது. (  24 சொற்கள் )
அம்மா தம்பியை அவசரச் சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் அவனை பரிசோதித்து அவனுடைய காலில் கட்டு போட்டார். இது அம்மாவுக்கும் தம்பிக்கும் ஒரு நல்ல பாடமாக அமைந்தது! 
(   22 சொற்கள் )

Tuesday, April 26, 2011

இனிய வாக்கியம் / அழகிய சொற்கள்

 
மாணவர்களே!

 
நீங்கள் ஒரு கட்டுரையை எழுத நினைக்கும்
பொழுது, அந்தக் கட்டுரை மிகவும் இனிமையாகவும்
அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால்,
சில இனிய வாக்கியம் அல்லது அழகிய சொற்களை
உங்களது கட்டுரைகளில் சேர்க்கலாம்!

 
இனிய வாக்கியம், அல்லது அழகிய சொற்கள்
என்று கூறினால் ஒரு மனிதனையோ,
பொருளையோ அல்லது ஒரு காட்சியையோ
அழகாக வருணிக்கும் தன்மை உடையது என்பது
பொருள்.

 
That is  - they are phrases or words that describe a person, thing or scenery in a very pleasant or descriptive manner!




1.  வண்டுகளும் தேனீக்களும் மலர்களைச் சுற்றி ரீங்காரமிடும் மயக்கும் மாலைப் பொழுது!

2. சூரியன் தன் வேலையைச் செவ்வனே செய்து முடித்து சற்று ஒய்வு எடுக்க மேற்கே சாய்ந்தான்!

3. மழைத்துளிகள் சடசடவென பெரிய தூறல்களாக விண்ணிலிருந்து மண்ணை நோக்கிப் பாய்ந்தன!

4. அச்செய்தியைக் கேட்டு மின்னலென பாய்ந்து அந்த இடத்தை அடைந்தான்!

5. இரக்கமும் ஈகையும் அவன் மனதை ஊடுருவ, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தான்!

6. பயம் என்னும் பேய் அவன் மனத்தைக் கௌவிக்கொண்டது!

7. அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென உருண்டோடி, அவள் எண்ணங்களை உலகிற்கு பறை சாற்றியது!

Sunday, April 3, 2011

Annaith Tamizh Mozhippayirchchi Nool Payirchi 37 Answers

ராமன் பசித்து வந்தவர்களுக்கு உணவு கொடுப்பதையும், உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவுவதையும் தன் வாழ்வில் கடைபிடித்து வந்தான்.

அவர்கள் இருவரும் ஒரே குணத்தை உடையவர்களாக இருந்ததால் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

தீபாவளியின் பொழுது அவனுக்குத் துணிகள் தைப்பதற்கு அதிகமாக இருந்ததால் அவனால் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடமுடியவில்லை.

ராமன் கொடுத்த உணவில் இருந்த மீன் முள் முதியவரின் தொண்டையில் சிக்கிக்கொண்டு அவர் இறந்ததே அவருக்கு ஏற்பட்ட பிரச்சனையாகும்.

 அந்த நாட்டின் சட்டப்படி, ஒருவரது மரணத்திற்கு ஒருவர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். ராமன் கொடுத்த உணவைச் சாப்பிட்டு முதியவர் இறந்ததால் ராமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவிருந்ததே அவனுக்கு நேர்ந்த பிரச்சினையாகும்.

மருதுவர் முதியவர் நெஞ்சுவலியுடன் தன் வீட்டிற்கு சென்றதால் நெஞ்சுவலியால் இறந்தார் என்று அதிகாரிகளிடம் கூறி புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்.