எண் | கூறு | வினா எண் | வினா வகை | மதிப்பளவு |
A | வாய்மொழித் தேர்வு | 50 | ||
B | கேட்டல் கருத்தறிதல் | 20 | ||
C | கட்டுரை | 40 | ||
மொத்தம் | 110 | |||
D | தாள் 2 | |||
i | வேற்றுமை | 6 | MCQ | 12 |
ii | செய்யுள் பழமொழி | 6 | MCQ | 12 |
iii | தெரிவிடைக் கருத்தறிதல் | 5 | MCQ | 10 |
iv | சொற்பொருள் | 3 | MCQ | 6 |
v | கருத்து விளக்கப்படக் கருத்தறிதல் | 3 | MCQ | 6 |
vi | ஒலி வேறுபாட்டுச் சொற்கள் | 5 | சுயவிடை | 10 |
vii | முன்னுனர்வுக் கருத்தறிதல் | 7 | சுயவிடை | 14 |
viii | சுயவிடைக் கருத்தறிதல் | 6 | சுயவிடை | 20 |
மொத்தம் | 90 | |||
ஆக மொத்தம் | 200 |
என் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே.. இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்!
Tuesday, September 28, 2010
Format - Primary 5 TL
Sunday, September 26, 2010
வாசித்தல் எப்படி?
மாணவ மணிகளே! உங்களுக்கு விரைவில் வாய்மொழித் தேர்வு வரப் போகிறது அல்லவா?? படத்தைப் பார்த்து நன்றாகப் பேசிவிட்டு மதிப்பெண்கள் பெறும் கூட்டம் ஒரு பக்கம்! ஆனால் ஒரு சிலருக்குப் படத்தைச் சரிவர விவரிக்கத் தெரியாத நிலையில் வாசித்தல் பெரும் உதவி புரிய வல்லதாக இருக்கும்.
ஓர் எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் பகுதியினைக் காணவும் :
ஒரு நாள் / சுந்தர் மளிகைக் கடைக்குச் / சென்றார். / கடைக்காரரிடம் / ஒரு மூட்டை அரிசியின் விலை என்ன / என்பது பற்றிச் / சுந்தர் விசாரித்தார். கடைக்காரர்,/ " ஒரு மூட்டை அரிசியின் விலை / ஐம்பது வெள்ளி, "/ என்று கூறினார்./ சுந்தர் / கடைக்காரரை ஏமாற்ற / எண்ணினார்./ அவர் உடனே, / "என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? / சென்ற வாரம் / நான் உங்கள் கடையில் அரிசி,/ பருப்பு,/ மிளகாய்,/ புளி எல்லாம் / வாங்கினேன். / அப்போது / உங்களது தம்பிதான் / கடையில் இருந்தார்./ அவர் / ஒரு மூட்டை அரிசி / நாப்பத்தைந்து வெள்ளி / என்று விற்றார்,"/ என்று கூறினார். /
இங்கு நான் சில இடங்களில் " / " என்ற குறியீட்டினைச் சேர்த்து இருக்கிறேன். பகுதியைப் படித்துப் பார்க்கும்போது " / " என்று காணும் இடங்களில் நீங்கள் சற்று நிறுத்தி படித்துப் பாருங்கள்; நீங்கள் படிப்பதில் ஓர் ஏற்ற இறக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இப்போது வேறு ஒரு பகுதியை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதனை நீங்கள் வழக்கம் போல படித்துப் பாருங்கள். சற்று முன்பு நீங்கள் படித்த பொழுது கிடைத்த ஏற்ற இறக்கம் வருகிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஏற்ற இறக்கம் வந்தால் மிக நன்று. ஆனால் உங்களுக்கு வராவிட்டால் கவலை வேண்டாம்!
நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதியில் நீங்களே " / " என்று குறியீடு போட்டுக்கொண்டு மீண்டும் படித்துப் பாருங்கள். இப்போது ஏற்ற இறக்குத்துடன் படிக்க முடிகிறதா என்று பாருங்கள். வந்திருக்குமே? .... அது!
சரி... " / " குறியை எங்கே போடுவது?? ஏதாவது formula உண்டா?? உண்டு... அதனை next மீட் பண்ணும் பொது சொல்கிறேன்.. மீண்டும் மீண்டும் வந்து Check செய்யவும்!
~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~
7 Oct 2010
* வேற்றுமை உருபு "கு" வந்த பிறகு வினை முற்று வந்தால், "கு" இடம் பெற்ற சொல்லுக்குப் பிறகு "/"
போடவேண்டும்.
* வேற்றுமை உருபு " இடம்" வந்த பிறகு, "/" போடவேண்டும்.
* கேள்விச் சொற்கள் , ( என்ன, எவை, எது, ஏன், எப்படி, எங்கே, எவ்வாறு, யார், யாவை, யாவர்) வந்த பிறகு "/" போடவேண்டும். அதே போல "?" வந்தாலும் "/" போடவேண்டும்.
* "," அல்லது ";" போன்ற குறிகளுக்குப் பின் "/" போடவேண்டும் ; முற்றுப்புள்ளி, - "." , ஆச்சரியக்குறி, - "!" ஆகியவற்றுக்குப்பின்னாலும் "/" கட்டாயம் போடவேண்டும்.
* வினை எச்சத்திற்குப்பிறகு "/" போடவேண்டும்.
எடு-கா: தூங்கி எழுந்தான். படித்து மகிழ்ந்தான். விழுந்து அழுதான்.
~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~
7 Oct 2010
ஒரு நாள் / சுந்தர் மளிகைக் கடைக்குச் / சென்றார். / கடைக்காரரிடம் / ஒரு மூட்டை அரிசியின் விலை என்ன / என்பது பற்றிச் / சுந்தர் விசாரித்தார். கடைக்காரர்,/ " ஒரு மூட்டை அரிசியின் விலை / ஐம்பது வெள்ளி, "/ என்று கூறினார்./ சுந்தர் / கடைக்காரரை ஏமாற்ற / எண்ணினார்./ அவர் உடனே, / "என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களா? / சென்ற வாரம் / நான் உங்கள் கடையில் அரிசி,/ பருப்பு,/ மிளகாய்,/ புளி எல்லாம் / வாங்கினேன். / அப்போது / உங்களது தம்பிதான் / கடையில் இருந்தார்./ அவர் / ஒரு மூட்டை அரிசி / நாப்பத்தைந்து வெள்ளி / என்று விற்றார்,"/ என்று கூறினார். /
* ஒரு கதை சொல்லும்போது ஆரம்பத்தில், "ஒரு நாள்" அல்லது " ஒரு ஊரில்" என்று வரும் இடத்தில் "/" போடவேண்டும்.
* வேற்றுமை உருபு "கு" வந்த பிறகு வினை முற்று வந்தால், "கு" இடம் பெற்ற சொல்லுக்குப் பிறகு "/"
போடவேண்டும்.
* வேற்றுமை உருபு " இடம்" வந்த பிறகு, "/" போடவேண்டும்.
* கேள்விச் சொற்கள் , ( என்ன, எவை, எது, ஏன், எப்படி, எங்கே, எவ்வாறு, யார், யாவை, யாவர்) வந்த பிறகு "/" போடவேண்டும். அதே போல "?" வந்தாலும் "/" போடவேண்டும்.
* "," அல்லது ";" போன்ற குறிகளுக்குப் பின் "/" போடவேண்டும் ; முற்றுப்புள்ளி, - "." , ஆச்சரியக்குறி, - "!" ஆகியவற்றுக்குப்பின்னாலும் "/" கட்டாயம் போடவேண்டும்.
* வினை எச்சத்திற்குப்பிறகு "/" போடவேண்டும்.
எடு-கா: தூங்கி எழுந்தான். படித்து மகிழ்ந்தான். விழுந்து அழுதான்.
Saturday, September 25, 2010
FAMILY
FAMILY, is an ACRONYM - Father And Mother, I Love You!
ஆகவே மாணவ மணிகளே! எமது இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுகளே! ~
உங்கள் தாய் தந்தையரை நேசியுங்கள்! இன்றிலிருந்தே தினமும் தாய் தந்தையரை உங்கள் மனதளவிலாவது கடவுளாக எண்ணி தினமும் தொழுது வரத் துவங்குங்கள்! நீங்கள் வளர்ந்து பெரியவர்களான பொழுது, அவர்களைப் பேணிக் காக்கும் பக்குவம் இப்போதிலிருந்தே உங்கள் நெஞ்சங்களில் துளிர்விட எனது மானசீக வாழ்த்துக்கள்!
Friday, September 24, 2010
Light Comedy Break!
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.
ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?
ஒன்றுமே தெரியாத Student-கிட்ட Question Paper கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட Answer Paper கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
True Gen. Know Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
Total தத்துவம்s - 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு Message'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" !! ஆமாங்க..
அதான்... அதேதான்....
Next மீட் பண்றேன்... இப்ப, Go and Continue Revision!! :p

இயமன்
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்கு, தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள் என்ற பொருள்கொண்ட, நான்மணிக்கடிகைப் பாடலொன்றைக் கீழே காண்க.
- கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
- மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
- அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
- இல்லத்துத் தீங்கொழுகு வாள்
FOLLOWER!!!
WOW!!! I have a follower to my Tamil Blog!!!!
Thank you Mazlina!
Mazlina is my first batch Pri6 girl who had gone on to Raffles Girls' Secondary and then gotten into the integrated prog. This means she does not have to do her O level exams, but must undertake to do multiple projects on given themes and ideas.
After this, she went to Raffles Junior College and now finally is in the NUS.
There was one day, she spoke to me over MSN chat from her school in her year 2 of RGSS. In this conversation, she told me: Aasiriyar!!! I am in the Integrated Programme!!! and I said : Romba santhosham maa.. congrats... ( note this point... i DIDNT know what that meant at the time!) she later explained it to me... blush blush!!
and she ended off by saying ; Aasiriyar!! YOU are the reason I have come so far in my life!
I was dumbfounded! I never take the credit for any of my pupils' successes ( OR downfalls! ) and she insisted it was so! I thought to myself then. I think I have reached the pinnacle of my teaching career.
Pls correct me if I am wrong.

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
ரகர றகர வேறுபாட்டுச் சொற்கள்
குரை - to bark ( like a dog )
குறை - to make lesser
எரி - to burn
எறி - to throw away
ஏரி - lake
ஏறி - to climb ( a ladder or a tree or steps.. )
கீரி - mongoose
கீறி - to scratch
அரை - to grind or half
அறை - room or to slap
அருந்து - to drink
அறுந்து - to break ( usually a string )
கூரிய - sharp
கூறிய - what was said
பரி - horse
பறி - to pluck
கரி - a male elephant or charcoal
கறி - meat or gravy
பொரி - to fry
பொறி - to engrave
இரங்கி - to pity
இறங்கி - to climb down
தரி - to put on or to take on roles ( for eg in a drama of a movie)
தறி - a tool for weaving cloth
அரிய - excellent
அறிய - to know
நகர ணகர னகர வேறுபாட்டுச் சொற்கள்
என்ன - what?
எண்ண - to think
பனி - snow
பணி - work or job
மனம் - heart
மணம் - marry or smell
கனம் - heavy
கணம் - second
உன் - your
உண் - to eat
என் - my
எண் - think
ஆனி - a Tamil month
ஆணி - nail
தனி - alone or singular
தணி - to quench ( usually thirst )
கனி - fruit
கணி - to calculate
லகர லகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்
காலை - morning
காளை - male cow, bull, male buffalo
பால் - milk
பாழ் - old or spoilt
வெல்லம் - sugar
வெள்ளம் - water or flood
வேலை - work or job
வேளை - time
அளி - to give
அழி - to destroy
இலை - leaf
இளை - to become thin
இழை - to give
குளம்பு - hoof of an animal ( usually horse)
குழம்பு - gravy
விளி - to call
விழி - to stare or blink / or eye
ஆல் - banyan tree
ஆள் - person
ஆழ் - to immerse oneself or to go deep into something
மூலை - corner
மூளை - brains
ஒலி - sound
ஒளி - light
ஒழி - to destroy
தோல் - skin
தோள் - shoulder
கிலி - scared, fear
கிளி - a bird like a parrot
கிழி - to tear
வலை - net or trap
வளை - to bend or a hole ( like a mouse hole, or a rabbit hole)
குளி - to bathe
குழி - a hole in the ground
பல்லி - lizard
பள்ளி - school
நீலம் - blue
நீளம் - long
பலம் - strong
பழம் - fruit
அலகு - beak of a bird
அழகு - beauty
புலி - tiger
புளி - tamarind
மலை - mountain
மழை - rain
கோலி - marble
கோழி - chicken
அலை - waves
அழை - to call
வால் - tail
வாள் - sword
வாழ் - to live
கொல் - to kill
கொள் - to have
குலை - a bunch ( usually grapes or banana..)
குழை - to become to soft ( usually overcooked rice )
அல்லி - a water flower, water lily
அள்ளி - to carry
களி - happy
கழி - to spend or to give away/take away, sticks.
Thursday, September 23, 2010
கட்டுரை சூழ்நிலைகள்
பூங்காவில் எவற்றைக் காணலாம்?
* மரம், செடி, கொடி...
* பூச்செடிகள், பூக்கள், வண்டுகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள்
* விளையாட்டுச் சாதனங்கள் -
மேல் கீழ் ஆட்டப் பலகைகள் , ஊஞ்சல்கள் , சருக்குகள்
* முதியவர்கள், சிறார்கள், பெற்றோர், நண்பர்கள், சிறுமிகள், சிறுவர்கள்
பூங்காவில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
* திடீரென்று மழை பெய்ய வாய்ப்புகள் உண்டு.
* வண்டுகள் அல்லது தேனீக்கள் சிறார்களைக் கொட்ட அல்லது கடிக்க வாய்ப்பு உண்டு
* குழந்தை பட்டாம்பூச்சியைத் துரத்தி ஓடும்போது கீழே விழுந்திட வாய்ப்பு உண்டு ; அதே போல சாலைக்கு ஓடிட வாய்ப்பு உண்டு, - இதனால் சாலை விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
* சிறுவர்கள் சண்டை போட வாய்ப்பு உண்டு, அவர்களுக்கு பெற்றோர் அல்லது முதியவர்கள் அறிவுரை கூறலாம்
~*~*~*~*~*~*~
பள்ளி உணவகத்தில் எவற்றைக் காணலாம்?
~*~*~*~*~*~*~
பள்ளி உணவகத்தில் எவற்றைக் காணலாம்?
* நீண்ட மேசைகள், இருக்கைகள்
* உணவுக் கடைகள், மாணவர்கள் அவற்றுக்கு முன் வரிசையில் நிற்பது
* சட்டாம்பிள்ளைகள், ஆசிரியர்கள்
* பொதுத் தொலைபேசிகள்
* அறிவிப்புகள் , அறிவிப்புப் பலகைகள் , புத்தகம் விற்க வந்திருப்போர்
பள்ளி உணவகத்தில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
* வரிசையில் நிற்கும் மாணவர்களிடையே சண்டை
* ஓடும் மாணவன் உணவுப் பொருட்களை தட்டிவிடுதல், சூடான உணவுப் பொருட்கள் கீழே சிந்துதல், பிற மாணவர்களுக்கு அடி படுதல்
* அருகில் உள்ள திடலுக்கு விளையாடச் செல்லுதல்
* விளையாட்டுத் திடலில் கீழே விழுந்து கை அல்லது கால்களில் அடி படலாம்.
* விளையாட்டுத் திடலில் பாம்பு வரலாம்!
* விளையாட்டுத் திடலில் பணப் பை கண்டு எடுக்கலாம் அல்லது பணப் பையை தொலைக்கலாம். அந்தப் பணப் பையை நண்பன் கண்டு எடுக்கலாம்
~*~*~*~*~*~*~
~*~*~*~*~*~*~
வகுப்பறையில் எவற்றைக் காணலாம்?
* மேசை நாற்காலி, வெண்பலகை, ஆசிரியரின் கணினி, சன்னல்கள், குப்பைத்தொட்டி, அலமாரிகள், அறிவிப்புப்பலகைகள்.
* மாணவர்கள் அமைதியாகப் படிப்பது, மாணவர்கள் சட்டம் போட்டு ஆரவாரம் செய்வது, ஆசிரியர் வகுப்பைக் கட்டுப்பாட்டுடன் வைக்கமுடியாமல் இருப்பது அல்லது கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது, ஆசிரியர் பாடம் நடத்தும் பொது வகுப்பின் பின்னால் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது.
* மாணவர்கள் வீட்டுப்ப்பாடத்தை வீட்டில் வைத்து விட்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வகுப்பில் என்னன்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன?
* மாணவர்கள் ஓடி மேசை நாற்காலிகளில் மோதி விழுந்து அடி பட்டு இரத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* ஆசிரியர் மாணவர்களைத் திட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* இரைச்சலான வகுப்பைக் காண பக்கத்து அரை ஆசிரியரோ, பள்ளி முதல்வரோ, துணை முதல்வரோ வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
* யாராவது ஒரு மாணவனின் வீட்டிலிருந்து பெற்றோர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
COMPETITION!!
அடக்கம் உடையார் அறிவிலார் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு!
இந்தச் செய்யுளை உங்களில் யார் சரியாக பொருள் கூறுகிறார் என்று ஒரு போட்டி வைப்போமா?
தமிழை இரசியுங்கள்!
மாணவர்களே! சாதாரண காக்கா வடை திருடிய கதையை நடிகர் விவேக் கவிஞர் வைரமுத்துவைப் போல வேடம் போட்டு எப்படி சொல்கிறார் என்று பாருங்களேன்! ஹஹஹா!
நான் இதை முதல் முதலாகக் கண்டோ போது கண்ணீர் வரும் வரை சிரித்து மகிழ்ந்தேன்! :)
கட்டுரை: நினைவில் கொள்ள வேண்டியவை!
1. சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள், ( p5 and p6 pupils ) தயவு செய்து படக் கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும்! ONLY only OnLy ~ picture compositions, DO YOU UNDERSTAND!?!?!
2. படங்களை நன்றாகப் பார்த்தவுடன் உதவிச் சொற்களை படித்து புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் உதவிச் சொற்கள் சில முக்கிய தகவல்களைக் கொடுக்கக்கூடும்.
3. கட்டளை வாக்கியத்தில் எத்தனை சொற்கள் எழுதக் கேட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள் அந்த எண்ணிக்கைக்கு 10 % அதிகமாகவோ, குறைவாகவோ எழுதினாலே போதுமானது.( For eg, if they ask you to write 90 words, you can write 81 - 99 words. This info is for MA pupils)
4. நன்றாக / சிறப்பாக எழுதக் கூடிய மாணவர்கள் காலம் கருதி எழுத முடிந்ததை எழுதிக் கொடுத்தல் நன்று. So remember to plan your time properly. I will NOT be there to remind you! - esp my HTL pupils.
5. கட்டுரை எழுதும் போது, ஒரு சில இடங்களில் அழகிய சொற்கள், இனிய வாக்கியங்கள் எழுதுவது கட்டுரையின் தரத்தைக் கூட்டும். ஆனால், ஒவ்வொரு பத்தியிலும் இவற்றைத் திணித்து எழுதினாலும் நன்றாக இராது! சுமார் நூறு சொற்கள் கொண்ட கட்டுரைக்கு நான்கு அல்லது ஐந்து இனிய வாக்கியங்கள் இருந்தாலே மிகவும் நன்று, அத்துடன் அது போதுமானதும் கூட.௦
6. காலை நேரத்தை பற்றி எழுதும் போது " சூரியன் தன் பொன் கரங்களை விரித்து தரணியெங்கும் ஒளி பரப்பிக் கொண்டிருந்த வேளை" என்று எழுத முடிந்தால் மிகவும் சிறப்பு. இருப்பினும், "என்றும் போல அன்றும் பொழுது புலர்ந்தது! முகுந்தன் தன காலைக் கடன்களைச் செவ்வனே செய்து முடித்தான்" என்று எழுதினாலும் சாலச் சிறந்ததே! ( Its short and sweet!)
7. இத்துடன் ஆங்காங்கே உங்களால் திருக்குறள்களில் ஏதேனும் ஒன்றினை கட்டுரைக்கு ஏற்றாற்போல அமையும் வண்ணம் தொடக்கத்திலோ, முடிவிலோ புகுத்த முடியும் என்றால், chance - ஏ இல்லை! கொன்னுடுவீங்க!
எடுத்துக்காட்டாக : " தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது" என்பது தெய்வப் புலவரின் போய்யாமொழியாகும்! இக்குறளைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது!
என்றும் போல அன்றும் பொழுது புலர்ந்தது! வள்ளி விடியலில் எழுந்து தன் காலைக் கடன்களைச் செவ்வனே செய்து முடித்து பள்ளிக்குக் கிளம்பினாள்........"
இன்னும் திருக்குறள் படிக்காத சிறுவர்கள் : நீங்கள் பழமொழிகளையும் கூட பயன்படுத்தலாம்! எடுத்துக்காட்டாக - " அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்" என்பது நம் முன்னோர் கூறிய முதுமொழி! என்று நீங்கள் தொடங்கலாம்.
இவற்றைக் காட்டிலும் வேறு ஏதேனும் இருந்தால் , நினைவுக்கு வந்தால் நான் மேலும் இங்கு புகுத்தப் பார்க்கிறேன். so , மாணவ மணிகளே, என் மழலைச் செல்வங்களே - watch this space !

கட்டுரை இனிய வாக்கியங்கள் -- அழகிய சொற்கள்
உணர்ச்சிகள்
கோபம்
1 . முகம் / கண்கள் கொவ்வைப் பழம் போல சிவந்தது / சிவந்தன.
2 . சினத்தில் பற்களை நற நறவென்று கடித்தான்
3 . அவரது இரத்தம் கொதித்தது!
சோகம்
1 . சோகத்தில் அவள் கண்கள் குளமாயின!
2 . அவர்கள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள்
3 . கண்ணீர் அவன் கன்னங்களில் உருண்டோடியது
பயம்
1 . பயம் என்னும் பேய் அவன் மனதை ஆட்கொண்டது! / கவ்வியது!
2. அவர்கள் மனம் பட் பட் என்று தாளம் போட்டது.
3 .அவர்கள் சிலைபோல ஆடாமல் அசையாமல் நின்றனர்
மகிழ்ச்சி
1 . மகிழ்ச்சியில் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது!
2 . அவர் மனம் ஆனந்தத்தில் சிறகடித்துப் பறந்தது!
3 . மாணவர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்

Subscribe to:
Posts (Atom)