தொடர்ந்து வரும் காட்சிகள் எனது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனக்காக நடத்திய நாடகமாகும். இதன் ஒலி அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லையே என்பது எனக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது!
சுபன், பவேஷ் என்ற இரு மாணவர்களை வகுப்பு மாணவர்களே தேர்ந்தெடுத்து நாடகத்தைப் படைத்துக் கொடுக்க மாணவர்கள் முடிவெடுத்தனர். நாடகத்திற்குப் பிறகு மறு குழுவிற்காக ஒரு கேள்வி பதில் அங்கமும் நடத்தி, சரியான விடை அளிக்கும் மாணவ நண்பர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கிச் சிறப்பித்தனர்!
கேள்வி பதில் அங்கம் நடத்துங்கள்! பரிசுகள் வழங்குங்கள் என்று நான் கூறாமலேயே அவர்களாகவே முடிவெடுத்து, அவர்களாகவே சொந்தச் செலவில் பரிசுப் பொருட்களை வாங்கி சக மாணவர்களை மகிழச் செய்தனர்! எனது முத்தான மாணவர்களை நான் எவ்வாறு பாராட்டுவது?
No comments:
Post a Comment