Map of Tamilnadu

Sunday, October 10, 2010

வாக்கியங்களை முடித்து எழுதுக ( விடைகள் )

 
1 . மீனவர்கள் தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான
மீன்களைப் பிடிக்கவேண்டும் என்று எண்ணினார்கள்.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி _________________.

தங்கள் படகுகளை நன்றாகச் செலுத்தி அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எண்ணம்.


2 . ஆசிரியர் தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்றே விரும்பினார்.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் ______________.

தம் மாணவர்கள் நற்பண்புகளுடன் திகழவேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம்.

3 . இன்றைய இளைய நடிகர்களின் விருப்பம் சிறார்கள் படித்து முன்னேற வரவேண்டும் என்பதே ஆகும்.

இன்றைய இளைய நடிகர்கள் _______________. 

இன்றைய இளைய நடிகர்கள் சிறார்கள் படித்து முன்னேறி வரவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+

1. அப்பாவுக்கு அம்மா சமைக்கும் பிரியாணியை உண்ண மிகவும் விருப்பம்.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை ____________.

அப்பா அம்மா சமைக்கும் பிரியாணியை
உண்ண மிகவும் விரும்புவார்.



2. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை மாணவர்கள் கருத்தூன்றிப் படித்தனர்.

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் _______________. 

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் மாணவர்களால் கருத்தூன்றிப் படிக்கப்பட்டது.


3. சிறு பிள்ளைகள் கசப்பான மருந்தினை வெறுக்கிறார்கள்.

கசப்பான மருந்து ________________.

கசப்பான மருந்து சிறு பிள்ளைகளால் வெறுக்கப்படுகிறது.

~+~+~+~+~+~+~+~+~+~


1. சிலந்தி பலமுறை முயற்சி செய்து வலையைப் பின்னி முடித்தது.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை _______________.

சிலந்தி வலையைப் பின்னி முடிக்க பலமுறை முயற்சி செய்தது.

2. முகுந்தன் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிழ்விக்க கடுமையாக உழைத்தான்.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் _______________.

முகுந்தன் கடுமையாக உழைக்கக் காரணம் தேர்வில் வெற்றி பெற்று தன் பெற்றோரை மகிழ்விப்பதற்கே ஆகும்.



3. சரியான உணவு உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ______________.

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சரியான உணவை உட்கொள்ள வேண்டும். / உட்கொள்வது உதவும்-உதவுகிறது (1ma )

~+~+~+~+~+~+~+~+~+~

1. கேள்விகளைச் சரியாகப் படிக்காததால் மாதவன் தவறான விடையை அளித்தான்.

மாதவன் தவறான விடையை அளித்ததற்கு ____________.

மாதவன் தவறான விடையை அளித்ததற்கு அவன் கேள்விகளைச் சரியாக படிக்காததே காரணம் ஆகும்.

2. புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுவதற்கு முன்னாள் அமைச்சர் கொலையுண்டதே காரணம் ஆகும்.

முன்னாள்  அமைச்சர் கொலையுண்டதால் _____________.

முன்னாள் அமைச்சர் கொலையுண்டதால் புதுச்சேரியில் பதற்றநிலை நிலவுகிறது.


3. இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் தமிழர்களுக்கு தனி பெருமை.

தமிழர்களுக்கு தனி பெருமை கிடைக்க ______________.

தமிழர்களுக்குத் தனி பெருமை கிடைக்க இராமானுஜம் கணிதத்தில் சிறந்து விளங்குவதே காரணம் ஆகும்.

No comments:

Post a Comment