தேர்வுகள் அனைத்தும் இனிதே முடிவடைந்தன அல்லவா??
சுறுசுறுப்பான நெஞ்சங்களுக்கு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமே? இளம் பெண்களாக இருக்கும் நீங்கள் ஏன் சமையல் செய்து பழகக் கூடாது? இதோ! ஓர் எளிய சட்னி செய்முறை :
** பிடித்திருந்தால் சொல்லுங்களேன், இன்னும் பற்பல சமையல் குறிப்புகளை தயாரிக்கிறேன்!
தேவையான பொருட்கள்
2 தக்காளி
2 பெரிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்
3 சிவப்பு மிளகாய்
சிறிது புளி ( சுவைக்காக )
1 /2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
சிறிது நல்லெண்ணெய்
1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பு
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
1 கொத்து கறிவேப்பிலை
1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
செய்முறை
* தக்காளி மற்றும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
* தீயில் வைத்த ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றவும்
* முதலில் வெங்காயம், பின் பெருங்காயம், பின் தக்காளி, பின் மிளகாய்கள் அனைத்தையும் மற்றும் எஞ்சிய பொருட்கள் அனைத்தையும் போட்டு வதக்கவும்.
* இவை அனைத்தும் முக்கால் பதம் வெந்தவுடன் தீயில் இருந்து இறக்கி, சற்று ஆற விடவும்.
* ஆரிய கலவையை எடுத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அல்லது நைசாக ( உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ) அரைத்து எடுக்கவும்.
* இறுதியாக தாளிப்புவகைகளை தாளித்து சட்னியில் கொட்டி நன்றாகக் கிளறி தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும்.
* மேதுவடையுடன் தொட்டுச் சாப்பிட்டாலும் இது பிரமாதம்தான்!