மாணவர்களே, இல் என்னால் பாடத்தைப் புகுட்ட முடியவில்லை. ஆதலால்
நான் இங்கு உங்கள் தேசிய வீட்டுப்பாடத்தைக் கொடுக்கிறேன். பதில்களை
ஒரு தாளில் நீங்கள் எழுதி வாருங்கள்.
A1 வேற்றுமை
Q1 முதல் Q6 வரையுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான வேற்றுமை உருபு ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)
அது பள்ளி விடுமுறை காலம். மாலை நேரத்தில் சேகரும் வீராவும் பூங்காவில் சந்தித்து விளையாடுவது வழக்கம். அன்றும் அவர்கள் கையில் ( Q1)_______ வீட்டை விட்டு புறப்பட்டனர். அவர்கள் (Q2)______ கீழ்த்தளத்தில் சந்தித்தனர். இருவரும் வேகமாக சறுக்கிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். அப்போது எதிரே வந்த (Q3)_______ மின்னலாய் சறுக்கி வந்த சேகர் மோதினான். மீனா தரையில் விழுந்தாள். மீனாவின் (Q4)_______ ரத்தம் கொட்டியது. சேகர் அதிர்ந்து போனான். அந்தப் பக்கமாக சென்றவர்கள் (Q5)________ வந்தனர். அவர்கள் உடனடியாக (Q6) _________ மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டனர். விரைந்து வந்த மருத்துவ வண்டியில் மீனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சேகரும் வீராவும் தங்கள் செய்த தவற்றை உணர்ந்தனர்.
Q1. (1) சறுக்குறுளையில்
(2) சறுக்குறுளையுடன்
(3) சறுக்குறுளையால்
(4) சறுக்குறுளையிலிருந்து
Q2. (1) கட்டடத்தில்
(2) கட்டடத்திற்கு
(3) கட்டடத்தின்
(4) கட்டடத்தை
Q3. (1) மீனாவை
(2) மீனாவிடம்
(3) மீனாவுக்கு
(4) மீனாவால்
Q4. (1) தலையை
(2) தலையுடன்
(3) தலையோடு
(4) தலையிலிருந்து
Q5. (1) உதவியுடன்
(2) உதவிக்கு
(3) உதவியால்
(4) உதவியின்
Q6. (1) தொலைபேசியால்
(2) தொலைபேசியோடு
(3) தொலைபேசியில்
(4) தொலைபேசிக்கு
A2 செய்யுள் / பழமொழி
Q7முதல் Q12 வரையுள்ள செய்யுள் / பழமொழியை நிறைவு செய்வதற்காக ஏற்ற சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (12 மதிப்பெண்கள்)
Q7. கைப்பொருள் தன்னின் __________________ கல்வி.
(1) நிலைபொருள்
(2) மெய்ப்பொருள்
(3) தொல்பொருள்
(4) பெரும்பொருள்
Q8. _______________ பாராத வேலை ஒரு முழம் கட்டை.
(1) உரியவன்
(2) இளையவன்
(3) உடையவன்
(4) ஆள்பவன்
Q9. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
__________________ உரியர் பிறர்க்கு.
(1) என்றும்
(2) எங்கும்
(3) எவரும்
(4) என்பும்
Q10. கரைப்பார் கரைத்தால் கல்லும் ____________________.
(1) கரையும்
(2) மறையும்
(3) உறையும்
(4) குறையும்
Q11. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
________________ தலைகாண்பு அரிது.
(1) பசும்புல்
(2) விளிம்பில்
(3) களிப்பில்
(4) பசும்பால்
Q12. எப்பொருள் எத்தன்மைத்து ______________ அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(1) இருப்பினும்
(2) காணினும்
(3) எனினும்
(4) ஆயினும்
B3 தெரிவுவிடைக் கருத்தறிதல்
பின்வரும் கதையைக் கருத்தூன்றிப் படி.
Q13 முதல் Q17 வரையுள்ள வினாக்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியையொட்டி அமைந்துள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் உரிய மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு.
(10 மதிப்பெண்கள்)
(1) மன்னன் வயதானவர்களை வெறுத்ததால்
(2) மன்னன் காட்டு விலங்குகளை வளர்த்து வந்ததால்
(3) நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதால்
(4) வயதானவர்கள் நாட்டிற்குப் பெருந்தொல்லை தந்ததால்
(1) தன் தந்தை அங்கேயே இருந்து இறந்து விடுவார் என்பதால்
(2) தன் தந்தை தனக்கு அவ்வப்போது உதவுவார் என்பதால்
(3) தன் தந்தையின் நோய் மற்றவருக்குப் பரவக்கூடாது என்பதால்
(4) தன் தந்தை உயிரோடு இருப்பது மன்னனுக்குத் தெரிந்தால்
ஆபத்து வந்துவிடும் என்பதால்
(1) அவை நோய்வாய்ப்பட்டு இருந்தன என்பதால்
(2) விவசாயம் செய்ய அவை தேவைப்படும் என்பதால்
(3) அவை இறந்துவிடும் என்பதால்
(4) மற்றவருக்கு அவை பயன்படும் என்பதால்
Q16 முதியவரின் மகன் மட்டும் எவ்வாறு அதிகச் செல்வம் பெற்றான்?
(1) முதியவரின் அறிவுரையைக் கேட்டதால்
(2) அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டதால்
(3) தன் மகனின் ஆலோசனையைக் கேட்டதால்
(4) ஊர் மக்களின் ஆலோசனையைக் கேட்டதால்
Q17 அரசர் தான் போட்டிருந்த சட்டத்தை நீக்கக் காரணம் என்ன?
(1) முதியவர்கள் மக்களைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக
(2) முதியவர்களின் அறிவுரை நாட்டிற்குப் பயன்படும் என்பதற்காக
(3) முதியவர்களுக்குத் தங்க இடம் தரவேண்டும் என்பதற்காக
(4) முதியவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதற்காக
B4 சொற்பொருள்
Q18 முதல் Q20 வரையுள்ள சொற்கள் மேற்கண்ட கருத்தறிதல் பகுதியில் இடம்பெற்றவை. அவற்றின் பொருளை உணர்த்தும் சரியான சொல்லைக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களிலிருந்து தேர்ந்தெடு. அதன் பின்னர், OAS விடைத்தாளில், அந்த விடையின் எண்ணுள்ள நீள்வட்டத்தை நிழலிடு. (6 மதிப்பெண்கள்)
Q18 தேவைப்படும் (1) செயல்படும்
(2) கிடைக்கும்
(3) பயன்படும்
(4) நிலைக்கும்
Q19 சிரமப்பட்டனர் (1) கஷ்டப்பட்டனர்
(2) அலைந்தனர்
(3) வருந்தினர்
(4) வேண்டினர்
Q20 நீக்கி (1) நிறுத்தி
(2) அழித்து
(3) அகற்றி
(4) மறைத்து
No comments:
Post a Comment