மாணவர்களே.. நான் உங்கள் பார்வைக்காக சில கேள்விகளை இங்கே புகுத்தி இருக்கிறேன்..
நீங்கள் பார்த்துப் பயன் பெறலாம்.. இது உங்கள் பயிற்சிக்காகவே போட்டிருக்கிறேன்..
நீங்க என்னிடம் ஒப்படைக்க வேண்டாம்.. கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.
சொற்பொருள்
என் மாமா மலேசியாவில் வசித்து வருகிறார்.
வாழ்ந்து
காத்து
இருந்து
சூரியன் காலையில் தோன்றியது
வந்தது
உதித்தது
மறைந்தது
புலி மாமிசத்தை விரும்பி உண்ணும்
மானை
இறைச்சியை
உணவை
குதிரை வேகமாக ஓடும்
விரைவாக
பக்கமாக
ஓரமாக
நாம் அன்றாடம் குளிக்க வேண்டும்
அடிக்கடி
தினமும்
எப்போதும்
வேற்றுமை
நான் ________ மிட்டாய் வாங்கினேன்
கடையை
கடையில்
கடைக்கு
மாறன் _________ சென்றான்
பள்ளியை
பள்ளிக்கு
பள்ளியில்
நான் ________ வீட்டுக்குப் போனேன்
அம்மாவுக்கு
அம்மாவிடம்
அம்மாவுடன்
அன்னம் _________ நீந்தியது
குளத்தில்
குளத்திற்கு
குளத்தை
கமலா __________ படித்தாள்
பாடத்திற்கு
பாடத்தை
பாடத்தில்
முன்னுனர்வுக் கருத்தரித்தல்
குமார் தன வீட்டுத் தோட்டத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். பந்தை வேகமாக ________________
பந்து பக்கத்து வீட்டு தோட்டத்தில் பொய் விழுந்தது. பந்தை _______________ குமார் பக்கத்து வீட்டின் சுவரில்
ஏறினான். சுவரில் ஏறி பக்கத்து வீட்டின் தோட்டத்திற்குள் குதித்தான். திடீரென்று நாய்கள் ________ சத்தம் கேட்டது. குமார் திரும்பிப் பார்த்தான். மூன்று நாய்கள் குமாரை _______ ஓடி வந்துகொண்டிருந்தன. நாய்களைப் பார்த்த குமார் _____________ அடைந்தான். அவன் மீண்டும் வேகமாக சுவரில் ஏறி தன் தோட்டத்திற்குள் குதித்தான். நாய்களிடமிருந்து தப்பியதை எண்ணி மகிழ்ந்தான்.
உதைத்தான் குரைக்கும் எடுக்க
விரைந்து நோக்கி அதிர்ச்சி
ஒலி வேறுபாடு
எலியின் _________________ நீளமாக இருக்கிறது
வால் வாள்
குமார் ___________ மீன் பிடித்தான்
ஏரியில் ஏறியில்
சூரியனின் ________ தெரிந்தது
ஒளி ஒலி
பூ நன்றாக __________ வீசியது
மனம் மணம்
அப்பா _______________ சென்றார்
வேலைக்கு வேளைக்கு
காலங்கள்
மாணவர்கள் நேற்று பாடம் படித்தார்கள்.
மாணவர்கள் நாளை பாடம் ________________.
கிளி அழகாகப் பேசியது.
கிளி இப்போது அழகாகப் _______________.
நீ வகுப்புக்கு வந்தாய்
நீ நாளை என் வீட்டுக்கு ______________?
மாலதி இப்போது நன்றாக நடனம் ஆடுகிறாள்
மாலதி சென்ற வாரம் நன்றாக நடனம் ____________________.
நீ நேற்று படம் பார்த்தாயா?
இப்போது நீ படம் ________________.
சுயவிடக் கருத்தரித்தல்
ஒரு நாள் வேடன் காட்டிருக்குச் சென்றான். அவன் காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து சென்றான். ஆனால், அவன் கண்ணில் மிருகங்கள் ஒன்றும் தென்படவில்லை. நீண்ட தூரம் நடந்ததால் வேடன் களைத்துப் போனான். அவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் உட்கார்ந்த மரத்தில் எதோ சத்தம் கேட்டது. வேடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அவன் அதிர்ச்சி அடைந்தான்.
மரத்தின் மேலே ஒரு புலி உட்கார்ந்து இருப்பதைக் கண்டான். அவன் புளியைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தான். உடனே தன் கையில் இருந்த அம்பை வைத்து புளியைக் கொன்றான். புலி அம்பு பட்டு இறந்தது.
1. வேடன் ஏன் காட்டிர்க்குச் சென்றான்?
2. வேடன் ஏன் களைப்பு அடைந்தான்?
3. வேடன் புலியை எங்கு கண்டான்?
4. வேடன் புளியைக் கண்டதும் என்ன முடிவு செய்தான்?
5. புலி எப்படி இறந்தது?
No comments:
Post a Comment