மாணவர்களாகிய நீங்கள் தொடக்கநிலை நான்கிலிருந்து ஆறு வரையில் அதற்கும் மேல் கூட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும்
கட்டுரை எழுதும் பொழுதும் வாய்மொழித் தேர்வுகளில் பேசும் போதும் பயன்படுத்தலாம்.
அதற்கேற்றாற்போல வெவ்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ள நான் உங்களுக்குப் பாகுபடுத்தப்பட்ட சில இனிய வாக்கியங்களையும், அழகிய சொற்றொடர்களையும் கொடுத்திருக்கிறேன்!
படியுங்கள்! பயனடையுங்கள்!!
இயற்கை
* சிலு சிலுவென தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்த வேளை!
* நண்பகல் வெயில் அனலாக இருந்தது!
* பொன்னிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான தோட்டம் அது.
* இரு மருங்கிலும் பசுமையான காட்சிகளைக் கண்டு களித்தான்
* கண்களைக் கவரும் இயற்கை அழகு
மாலை நேரம் / இரவு
* வட்ட வடிவழகி நிலாப் பெண்ணாள் தன்னொளியை வீசிக்கொண்டு வானத்தில் பவனி வரும் நேரம்.
* மாலைக் கதிரவனின் செம்மை உலகம் முழுவதும் பரவியது
* கதிரவனின் ஒளிமென்மையாகவும் மாலைக் காற்று சில்லென்றும்
இதமாகவும் இருந்தது.
* கதிரவன் கோபம் தணிந்து பூமியிலிருந்து ஒதுங்கிட, காற்று ஜில் என்று
வீசியது.
* கதிரவன் தன வேலையைச் சந்திரனிடம் ஒப்படைத்துச் சென்றான். விண்மீன்கள் பளிச் என்று மின்னின!
* நீல வானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நட்சத்திறங்கள் கண் சிமிட்டின.
அதிர்ச்சி
* அடிவயிற்றில் இடி விழுந்தது
* திகிலடைந்தேன்
* வார்த்தைகள் தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டு வெளிவரத் தவித்தன
* இதயத் துடிப்பே ஒரு கணம் நின்றுவிடும் போல ஓர் உணர்வு ஏற்பட்டது
* ஒரு கணம் செய்வதறியாது திகைத்து நின்றான்
* என்னை தொட்ட பொழுது தான் நான் சுய நினைவுக்கு வந்தேன்
இன்னல் படுவது / துன்பம்
* வலையில் அகப்பட்ட மீனைப்போல வேதனையில் துடித்தான்
* சிங்கத்திடம் சிக்கிய மானைப்போல மிரண்டான்
* துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் அருவியென வழிந்தது
* நோய் வாட்டத் தொடங்கியது
* என் கண்களிலிருந்து நீர் சொரிந்தது. என் உள்ளம் அழுதது
* கண்ணீர் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது
* முகத்தில் ஈயாடவில்லை
* அவள் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்
* எதையும் பேச நா எழவில்லை
கவலை
* சோகக் கடலில் மூழ்கி இருந்தேன்
* மலர்ந்த முகம் வாடியது
* முகத்தில் சோகம் நிழலாடியது
* உலகம் இருண்டு விட்டது போல இருந்தது
* அவன் நிலை குலைந்து நின்றான்
* முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு
காற்று
* காற்றின் அசைவினால் மரங்களில் ஏற்பட்ட சலசலப்பு அந்த நிசப்தத்தில் நன்றாய்க் கேட்டன
* தென்றல் இனிமையாக வீசி மரங்களில் விரிந்திருந்த மலர்களின் மணத்தை எங்கும் பரப்பியது
* தென்றல் அவனது முகத்தை முத்தமிட்டுச் சென்றது
* தென்றல் இதமாக வீசி அவன் கன்னத்தைத் தடவிச் சென்றது
* சிலு சிலுவென்று வீசிக்கொண்டிருந்த தென்றல் அனைவரையும் மயக்கியது
கொண்டாட்டம் - மகிழ்ச்சி
* அவனுள்ளத்தில் ஒரு வகை உல்லாசம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது
* முகமெல்லாம் பல்லாகத் தெரிந்தது
* என் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது
* என் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை!
* பிள்ளையின் செயலைக் கண்ட பெற்றோர் பேருவகை அடைந்தனர்
* உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பது போல இருந்தது
* சொர்க்கலோகத்தில் இருப்பது போல உணர்ந்தாள்
* ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழியும் வரை சிரித்தேன்
* மகிழ்ச்சி வெள்ளம் அவன் மனதில் கரை புரண்டோடியது
* அன்று மலர்ந்த மல்லிகை போல அவன் முகம் மலர்ந்தது
* மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்
* நெஞ்சில் நிரம்பிப் பொங்கிக்கொண்டிருந்த ஆனந்தம் கண்ணீராய்
வெளிவந்தது
மழை
* கார்மேகங்கள் வானத்தைச் சூழ்ந்தன
* மழை வருவதற்கு அறிகுறியாக கருமுகில்கள் வானத்தைச் சூழ்ந்து கொண்டன
* பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்தது
* வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. மேகங்கள் கதிரவனை மறைக்கத் தொடங்கின
ஒற்றுமை
* பூவும் நாறும் போல
* நகமும் சதையும் போல
* இணை பிரியா தோழிகள்
~~~~~~~~~~~~~~~~~ more coming soon.