அ. செய்தித்தாளில் சுந்தரம் அண்மையில் நடந்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஒரு சிறுகதையைப் படித்தார்.
ஆ. சுந்தரம் செய்தித்தாள் அலுவலகத்தில் பணிபுரியும் தன நண்பரிடமிருந்து எழுத்தாளரின் விவரங்களைத் தெரிந்து கொண்டு அவரிடம் தொடர்பு கொண்டார்.
இ. கார்த்திகேயன் வகுப்பில் தினமும் கட்டுரைப்பாடம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருந்த ஒரு வித்தியாசமான மாணவனாக இருந்ததால் சுந்தரம் அவனை நினைவில் வைத்துக்கொண்டிருந்தார்.
ஈ. மாணவன் எழுதிக்கொடுத்தவற்றைத் தினமும் திருத்திக்கொடுத்ததொடு, மேலும் சிறப்பாக எழுதுவதற்கு வழிகாட்டி ஆசிரியர் அவனுக்கு உதவி புரிந்திருக்கிறார்.
உ. சுந்தரம் தம் மாணவன் சிறந்த எழுத்தாளன் ஆவேன் என்று சொன்னபடியே ஆனதாலும் அவன் போட்டியில் முதல் பரிசை வென்றதாலும் கார்த்திகேயனைத் தம் மாணவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைந்தார்.
No comments:
Post a Comment