Map of Tamilnadu

Thursday, June 25, 2015

மயங்கொலிச் சொற்கள் - ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


TEST TEST TEST !!!!! ண, ன பொருள் வேறுபாடு அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்க என்ன - போல, வினாச்சொல் எண்ணல் - எண்ணுதல் என்னல் - என்று சொல்லுதல் எண்கு - கரடி என்கு - என்று சொல்லுதல் ஏண் - வலிமை ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல் ஏணை - தொட்டில் ஏனை - மற்றது ஐவணம் - ஐந்து வண்ணம் ஐவனம் - மலை நெல் ஓணம் - ஒரு பண்டிகை ஓனம் – எழுத்துச்சாரியை கணகம் - ஒரு படைப்பிரிவு கனகம் - பொன் கணப்பு - குளிர்காயும் தீ கனப்பு - பாரம், அழுத்தம் கணி - கணித்தல் கனி - பழம், சுரங்கம், சாரம் கணம் - கூட்டம் கனம் -பாரம் கண்ணன் - கிருஷ்ணன் கன்னன் - கர்ணன் கண்ணி - மாலை, கயிறு, தாம்பு கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி கணை - அம்பு கனை - ஒலி, கனைத்தல் கண் - ஓர் உறுப்பு கன் - கல், செம்பு, உறுதி கண்று - அம்பு கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை கண்ணல் - கருதல் கன்னல் - கரும்பு, கற்கண்டு காண் - பார் கான் - காடு, வனம் காணம் - பொன், கொள் கானம் - காடு, வனம், தேர், இசை காணல் - பார்த்தல் கானல் - பாலை கிணி - கைத்தாளம் கினி - பீடை கிண்ணம் - வட்டில், கிண்ணி கின்னம் - கிளை, துன்பம் குணி - வில், ஊமை குனி - குனிதல், வளை குணித்தல் - மதித்தல், எண்ணுதல் குனித்தல் - வளைதல் குணிப்பு - அளவு, ஆராய்ச்சி குனிப்பு - வளைப்பு, ஆடல் கேணம் - செழிப்பு, மிகுதி கேனம் - பைத்தியம், பித்து கேணி - கிணறு கேனி - பித்துப் பிடித்தவர் கோண் - கோணல், மாறுபாடு கோன் - அரசன் சாணம் - சாணைக்கல், சாணி சானம் - அம்மி, பெருங்காயம் சுணை - கூர்மை, கரணை சுனை - நீரூற்று சுண்ணம் - வாசனைப்பொடி சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம் சேணம் - மெத்தை சேனம் - பருந்து சேணை - அறிவு சேனை - படை சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி சோனம் - மேகம் சோணை - ஒரு நதி, சேரன் மனைவி சோனை - மழைச்சாரல், மேகம் தண் - குளிர்ச்சி தன் - தன்னுடைய தணி - தணித்தல் தனி - தனிமை தாணி - தான்றிமரம் தானி - இருப்பிடம், பண்டசாலை, தாணு - சிவன், தூண், நிலைப்பேறு தானு - காற்று திணை - ஒழுக்கம், குலம் தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர் திண்மை - உறுதி தின்மை - தீமை திண் - வலிமை தின் - உண் துணி - துணிதல், கந்தை துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல் தெண் - தெளிவு தென் - தெற்கு, அழகு நண்பகல் - நடுப்பகல் நன்பகல் - நல்லபகல் நணி - அணி (அழகு) நனி - மிகுதி நாண் - வெட்கம், கயிறு நான் - தன்மைப் பெயர் நாணம் - வெட்கம் நானம் - புனுகு, கவரிமான் பணி - வேலை, கட்டளையிடு பனி - துன்பம், குளிர், சொல், நோய் பணை - முரசு, உயரம், பரந்த பனை - ஒருவகை மரம் பண் - இசை பன் - அரிவாள், பல பண்ணை - தோட்டம் பன்னை - கீரைச்செடி பண்ணுதல் - செய்தல் பன்னுதல் - நெருங்குதல் பண்ணி - செய்து பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல் பண்மை - தகுதி பன்மை - பல பணித்தல் - கட்டளையிடுதல் பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த பட்டணம் - நகரம் பட்டினம் - கடற்கரை நகர் பாணம் - நீருணவு பானம் - அம்பு புணை - தெப்பம் புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை புண் - காயம் புன் - கீழான பேணம் - பேணுதல் பேனம் - நுரை பேண் - போற்று, உபசரி பேன் - ஓர் உயிரி மணம் - வாசனை, திருமணம் மனம் - உள்ளம், இந்துப்பு மணை - மரப்பலகை, மணவறை மனை - இடம், வீடு மண் - தரை, மண்வகை மன் - மன்னன், பெருமை மண்ணை - இளமை, கொடி வகை மன்னை - தொண்டை, கோபம் மாணி - அழகு, பிரம்மசாரி மானி - மானம் உடையவர் மாண் - மாட்சிமை மான் - ஒரு விலங்கு முணை - வெறுப்பு, மிகுதி முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை வணம் - ஓசை வனம் - காடு, துளசி வண்மை - வளப்பம், கொடை வன்மை - உறுதி, வலிமை வண்ணம் - நிறம், குணம், அழகு வன்னம் - எழுத்து, நிறம் வாணகம் - அக்கினி, பசுமடி வானகம் - மேலுலகம் வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு வானம் - ஆகாயம், மழை வாணி - கலைமகள், சரஸ்வதி வானி - துகிற்கொடி ல, ழ, ள பொருள் வேறுபாடு அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை அழகு - வனப்பு அளகு - சேவல், பெண்கூகை அலகம் - திப்பிலி அளகம் - வெள்ளெருக்கு, நீர் அலகை - கற்றாழை, பேய் அளகை - அளகாபுரி, பெண் அழம் - பிணம் அலம் - கலப்பை அளம் - உப்பு அலத்தல் - அலட்டல், அலைதல் அளத்தல் - அளவிடுதல், மதித்தல் அலவன் - ஆண்நண்டு அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன் அழி - அழித்துவிடு அலி - பேடி, காகம், விருச்சிகராசி அளி - கருணை, கள், வண்டு அல்லல் - துன்பம் அள்ளல் - வாரி எடுத்தல் அழை - கூப்பிடு அலை - கடல், நீரலை, அலைதல் அளை - தயிர், நண்டு, புற்று அவல் - பள்ளம், உணவுப் பொருள் அவள் - பெண் (சேய்மைச்சுட்டு) அல் - இரவு அள் - அள்ளி எடு, நெருக்கம் உலவு - நட உளவு - ஒற்று உழவு - கலப்பையால் உழுதல் உழி - இடம், பொழுது உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று உலு - தானியப் பதர் உழு - நிலத்தை உழு உளு - உளுத்துப் போதல் உலை - கொல்லன் உலை, நீருலை உழை - பாடுபடு, பக்கம், கலைமான் உளை - பிடரி மயிர், சேறு, தலை உழுவை - புலி உளுவை - மீன்வகை எல் - கல், மாலை, சூரியன் எள் - எண்ணெய்வித்து, நிந்தை எலு - கரடி எழு - எழுந்திரு, தூண் ஒலி - சப்தம், நாதம், காற்று ஒழி - அழி, தவிர், கொல், துற ஒளி - வெளிச்சம், மறை(த்துவை) ஒல் - ஒலிக்குறிப்பு ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி கலகம் - போர், அமளி, இரைச்சல் கழகம் - சங்கம், கூட்டமைப்பு கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி களங்கம் - குற்றம், அழுக்கு கலி - கலியுகம், பாவகை, சனி கழி - கோல், மிகுதி, உப்பளம் களி - மகிழ்வு, இன்பம் கலை - ஆண்மான், சந்திரன், கல்வி கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம் களை - அழகு, புல் பூண்டு, அயர்வு கல் - மலை, பாறை, சிறுகல் கள் - மது, தேன் கலம் - கப்பல், பாத்திரம் களம் - இடம், போர்க்களம், இருள் காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம் காளி - துர்க்கை, மாயை காழி - சீர்காழி (ஊர்) காலை - பொழுது, விடியற்பொழுது காளை - காளைமாடு, இளைஞன் காலம் - பொழுது, நேரம் காளம் - எட்டிமரம், சூலம் கிலி - அச்சம், பயம் கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்) கிளி - பறவை, வெட்டுக்கிளி கிழவி - முதியவள், மூதாட்டி கிளவி - சொல், மொழி குலி - மனைவி குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு குளி -நீராடு குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி குலை - கொத்து, மனம் தடுமாறுதல் குழை - குண்டலம், குழைந்துபோதல் குலவி - மகிழ்ந்திருத்தல் குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல் குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி குலிகம் -சிவப்பு, இலுப்பை குளிகம் -மருந்து, மாத்திரை குவலை -துளசி, கஞ்சா குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண் கூலம் - தானியம், கடைத்தெரு கூளம் - குப்பை கூலி - ஊதியம் கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர் கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல் கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல் கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய் கொலை - கொல்லுதல் கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம் கொல்லாமை - கொலை செய்யாமை கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை கொள்ளி - கொள்ளிக்கட்டை கொல்லை - புழக்கடை, தரிசுநிலம் கொள்ளை - திருடுதல், மிகுதி கோலம் - அழகு, அலங்காரம் கோளம் - உருண்டை, வட்டம் கோலை - மிளகு கோழை - வீரமற்றவன், கபம் கோளை - குவளை, எலி கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு கோள் - கிரகம் கோலி - இலந்தை, விளையாடும் குண்டு கோழி - உறையூர், விட்டில், பறவை கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம் சலம் - நீர், சிறுநீர், குளிர் சளம் - பொய், துன்பம், வஞ்சனை சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம் சாளை - கடல்மீன் சாழை - குடிசை, குச்சு சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல் சுளித்தல் - முறித்தல், சினத்தல் சூலை - வயிற்று நோய் சூளை - செங்கல் சூளை சூல் - கர்ப்பம் சூழ் - சூழ்ந்துகொள், சுற்று சூள் - சபதம் சேல் - மீன் சேள் - மேலிடம் சோலி - ரவிக்கை, காரியம் சோழி - பலகரை சோளி - கூடைவகை தவளை - ஓர் உயிரி தவலை - பாத்திரம் தலம் - இடம், பூமி தழம் - தைலம் தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு தழை - தாவர உறுப்பு தலை - மண்டை தளை - விலங்கு தாலம் - உலகம், தேன் தாளம் - இசைக்கருவி, ஜதி தாலி - மங்கலநாண் தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம் தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு தாழ் - தாழ்தல், குனிதல் தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம். துலக்கம் - ஒளி, தெளிவு துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி துலம் - கோரை, கனம் துளம் - மாதுளை, மயிலிறகு துலி - பெண் ஆமை துழி - பள்ளம் துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு துலை - ஒப்பு, கனம் துளை - துவாரம், வாயில் தூலி - எழுதுகோல், எழுத்தாணி தூளி - புழுதி, குதிரை தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல் தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல் தெல் - அஞ்சுதல் தெள் - தெளிவான தோலன் - அற்பன் தோழன் - நண்பன் தோலி - பிசின், ஒருவகை மீன் தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள் தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி தோள் - புயம், வீரம் நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம், நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன் நலி - நோய் நளி - குளிர்ச்சி, பெருமை நலிதல் - நலிந்துபோதல், தோற்றல் நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல் நல் - நல்ல நள் - இரவு, நடு, நள்ளிரவு நாலம் - பூவின் காம்பு நாழம் - இழிவுரை, வசவு நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம் நாலி - முத்து, கந்தை ஆடை நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி நாளி - கல், நாய் நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து நாழிகை - வட்டம், கடிகாரம் நால் - நான்கு நாழ் - குற்றம், செருக்கு நாள் - காலம், திதி நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள் நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம் நீல் - நீலம், காற்று நீள் - நீளம், ஒளி பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை பழம் - கனி, முதுமை பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம் பலி - பலியிடுதல், பலியுயிர் பழி - குற்றம் பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு பாழ் - வீண், வெறுமை பீழை - துன்பம் பீளை - கண் அழுக்கு புலி - காட்டு விலங்கு புளி - புளியமரம், புளியங்காய் புலை - புலால், ஊன், கீழ்மை புழை - துளை, வாயில், நரகம் புகல் - அடைக்கலம் புகழ் - பெருமை புல் - அற்பம், கலவி, புல்பூண்டு புள் - பறவை பூலம் - புற்கட்டு பூளம் - பூவரசு பூழை - துவாரம், கோபுரவாயில் பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம் பாழி - கொடுத்தல், ஈதல் பாளி - வரப்பு, எல்லை பாலிவு - அழகு, நிறைவு பாழிவு - பொழிதல், மேன்மை போலி - பொய், வஞ்சகம், ஒப்பு போளி - இனிப்புப் பண்டம் பொலிதல் - செழித்தல், மங்கலமாதல் பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல் மலம் - அழுக்கு, பாவம் மழம் - இளமை, குழந்தை மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம் மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம் மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல் மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல் மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை மாளிகை - அரண்மனை, கோயில் மாலை - அந்திப்பொழுது, பூமாலை மாழை - மயக்கம், இளமை, அழகு மாளை - புளியம்பட்டை மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம் மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு) முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு முழை - குகை முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில் முழி - விழி (விழித்தல்) முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம் மூலி - மூலிகை, மரம், வேருள்ளது மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம் மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம் மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி) மெல்ல - மென்று தின்பது மெள்ள - மெதுவாக மாலி - மொளலி கிரீடம் மாழி - மேழி, கலப்பை மாளி - துணிமூட்டை வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி வளம் - வளமை, அழகு வலவன் - திருமால் வளவன் - சோழன், வேளாளன் வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன் வளன் - செழுமை, வளப்பன் வழப்பம் - வழக்கம், இயல்பு வளப்பம் - வளமை, செழிப்பு வலி - நோய், வலிமை, துன்பம் வழி - நெறி, பாதை, தடம், உபாயம் வளி - காற்று வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி வழை - சுரபுன்னை, புதுமை, இளமை வளை - கை வளையல், எலி வளை வல் - வலிமை, விரைவு, திறமை வள் - ஒலிக்குறிப்புச் சொல் வல்லம் - வாழை, ஓர் ஊர் வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன் வலு - வலிமை, பலம், பற்று வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு வளு - இளமை, இளைய வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்) வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்) வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி வாழை - வாழைமரம் வாளை - வாளை மீன் வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்) வாள் - போர்வாள், நீண்டகத்தி விலா - விலா எலும்பு விழா - திருவிழா, கொண்டாட்டம் விளா - இளமை, வெண்மை, நிணம் விழி - கண், கருவிழி விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று விலை - மதிப்பு, விலைக்கு விற்றல் விழை - விரும்பு, ஆசைப்படு விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்) விலக்கு - விலக்கி விடு, தவிர் விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம் விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம் விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை) வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு வேலம் - வேலமரம், தோட்டம் வேழம் - யானை, கரும்பு, மூங்கில் வேல் - வேலாயுதம் வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை வேலை - பணி, கடல் வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை ர, ற பொருள் வேறுபாடு அர - பாம்பு அற - தெளிய, முற்றுமாக அரவு - பாம்பு அறவு - அறுதல், தொலைதல் அரம் - ஒரு கருவி அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம் அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன் அறி - அறிந்துகொள் அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள அரன் - சிவன் அறன் - தர்மம், அறக்கடவுள் அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்) அறிவை - அறிவாய் அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை அறுகு - குறைந்து போதல் அக்கரை - அந்தக் கரை அக்கறை - ஈடுபாடு அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம் அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை அரைதல் - தேய்தல் அறைதல் - அடித்தல், சொல்லுதல் அப்புரம் - அந்தப் பக்கம் அப்புறம் - பிறகு அர்ப்பணம் - உரித்தாக்குதல் அற்பணம் - காணிக்கை செலுத்துதல் அரு - உருவமற்றது அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது அறுமை - நிலையின்மை, ஆறு ஆரு - குடம், நண்டு ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை ஆர - நிறைய, அனுபவிக்க ஆற - சூடு ஆற (குறைய) ஆரல் - ஒருவகை மீன் ஆறல் - சூடு குறைதல் இரத்தல் - யாசித்தல் இறத்தல் - இறந்துபோதல், சாதல் இரகு - சூரியன் இறகு - சிறகு இரக்கம் - கருணை இறக்கம் - சரிவு, மரணம் இரங்கு - கருணைகாட்டு இறங்கு - கீழிறங்கி வா இரவம் - இரவு இறவம் - இறால் மீன் இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில் இறவி - இறத்தல் இரவு - இரவு நேரம், யாசித்தல் இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம் இரை -ஒலி, உணவு இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள் இறு - ஒடி, கெடு, சொல்லு இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம் இறும்பு - வண்டு, சிறுமலை இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல் இறுப்பு - வடிப்பு இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல் இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல் இருக்கு - மந்திரம், ரிக் வேதம் இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல் இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம் உறவு - நட்பு, சுற்றம், எறும்பு உரவோர் - அறிஞர், முனிவர் உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர் உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி உறி - உறிவெண்ணெய், தூக்கு உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை உறு - மிகுதி உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல் உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல் உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல் உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை உரைப்பு - தங்குதல், தோய்தல் உறைப்பு - காரம், கொடுமை உரையல் - சொல்லல் உறையல் - மாறுபாடு, பிணக்கு உரிய - உரிமையான உறிய - உறிஞ்ச ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு ஊரு - அச்சம், தொடை ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம் எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல் ஏர - ஓர் உவமஉருபு ஏற - மிகுதி, உயர (ஏறுதல்) ஏரி - நீர்நிலை, குளம் ஏறி - உயர்ந்த, மேலே ஏறி ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு ஒறு - தண்டி, அழி, இகழ் ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர் ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல் ஒருவு - நீங்கு ஒறுவு - வருத்தம், துன்பம் கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது கறடு - தரமற்ற முத்து கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை கறம் - கொடுமை, வன்செய்கை சிகரம் - மலை உச்சி

Wednesday, June 18, 2014

தொடக்கநிலை 6 - ஒலி வேறுபாடு பயிற்சி

கீழ்க்காணும் சொற்களுக்குப் பொருள் தரும்படி வாக்கியம் அமைக்க முயற்சி செய். (1) ஆணி (2) குழி (3) வான (4) களி (5) கழி (6) வாண (7) கரை (8) ஆனி (9) குளி (10) கறை

Tuesday, June 17, 2014

P4 மாதிரிப் பயிற்சி - ஜூன் 2014...

இந்தக் கருத்தறிதல் பகுதியைப் படித்து அதற்குக் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை கொடுக்க முயற்சி செய். ~~~~~ விக்ரம் பள்ளி முடிந்து வீடு திரும்பினான். அவன் வீட்டின் கதவு பூட்டியிருந்தது. இது அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவன் வருகைக்காக அவன் அம்மா தினமும் வாசலில் காத்துக் கொண்டிருப்பார். அம்மாவைக் காணாதது அவன் மனத்தை என்னவோ செய்தது. அப்படி எங்கேயும் செல்ல வேண்டியிருந்தால் அம்மா அவனிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டுத் தான் போவார். ஆனால், அன்று அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. அவன் இவ்வாறு எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தபோது, அவன் அண்டை வீட்டாரின் கதவு திறந்தது. அவன் நண்பன் அலி தான் அவன் அண்டை வீட்டுக்காரன். அலியின் பாட்டி, “நீ எப்போது வந்தாய்? நீண்ட நேரம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார். “இப்போது தான் வந்தேன், பாட்டி,” என்றான் விகரம். அவன் ஏதேனும் கேட்பதற்கு முன் அலியின் பாட்டியே “உன் அம்மாவுக்கு உடல் நலம் இல்லை. அதனால் அவர் மருத்துவரைக் காணச் சென்றுள்ளார்,” என்று கூறினார். இன்னும் சற்று நேரத்தில் அவர் வந்து விடுவார் என்றும் கூறினார். அதோடு, அவன் அம்மா பாட்டியிடம் அவனுடைய மதிய உணவைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளதாக அலியின் பாட்டி கூறினார். விக்ரம் அவர் வீட்டிற்குச் சென்று அம்மா கொடுத்து விட்டுச் சென்ற உணவைச் சுவைத்துச் சாப்பிட்டான். பின் பாட்டியின் அனுமதியுடன் அலியோடு கணினியில் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அம்மா வந்ததும் பாட்டிக்கு நன்றி சொல்லி விட்டு வீடு திரும்பினான். 1. விக்ரமுக்கு எது அதிர்ச்சியைத் தந்தது? 2. அம்மா அவனுக்காக எங்கே காத்திருப்பார்? 3. அலியின் பாட்டி அவனிடம் என்ன கூறினார்? 4. அம்மா பாட்டியிடம் எதைக் கொடுத்துவிட்டுச் சென்றார்? 5. விக்ரம் அண்டை வீட்டில் என்னென்ன செய்தான்?

Wednesday, January 16, 2013

நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகம்

புதுவையில் நான் ஒரு மாத கால இலவசப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பொது கண்டெடுத்த புத்தகம் ஒன்று. சிறிய நூல் தான் இருப்பினும், பொருள் மிக அரிது!  நூலின் ஒரு சில கருத்துக்களை உங்களுடன் நான் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

வேலை: அதுவே ஒரு தியானம்
உங்கள் வேளையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாகக் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஆண்டவன் இருக்கிறான். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவன்தானே? இந்த உண்மையை மறக்கக்கூடாது.

குறை கூறலாமா?
நான் திரும்பவும் கூறுகின்றேன், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள். குறை கூறுவது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நடந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் அன்றுதானே அர்த்தம்? அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.

Saturday, May 5, 2012

மாணவர்களுக்கு இப்போது சோதனை நாட்களாகும்... என்ன பண்ணலாம்?
வருடம் பிறந்ததிலேர்ந்தே நீங்கள் மீள்நோக்கம் பண்ணிக்கொண்டு வந்திருந்தால் சரஸ்வதி  பக்கத்தில உட்கார்ந்து வாசிச்சிக்கிட்டே இருப்பாள்..

ஆனா, அப்படி செய்யாதவங்களுக்கு ஒரு குறிப்பு..
தினம்தினம் காலையில நன்னா குளிச்சிட்டு.. கீழ்வருமாறு கணேஷ்கிட்டே போயி கேளுங்க..

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா."
 
Do you know what the above means?? no? then look for me. :D
 
 
அது சரி.. நம்ம இஸ்லாமிய தம்பி தங்கைகளுக்கு எந்த மாதிரி ஸ்லோகங்கள்
சொல்லிக்கொடுக்கலாம்??

அதற்கு நீங்க கீழ்வரும் இடுகையை CLICK செய்யுங்கள்!  
 
 
கிருத்துவ மாணவர்கள் மன்னிக்கணும்.. I have not come across any prayers for you! :(
 

Sunday, April 29, 2012

மாணவர்களே...
 
இது ஒரு மீள்நோக்கம். உங்கள் தேர்வுகளில் ஒலி வேறுபாடு  கேட்கப்படும்.. அவற்றின் பட்டியல் கீழ்வரும் இடுகையில் வரும்!
 
READ ALLLLLL OF IT! >:D

http://cckpstamil.blogspot.com/2010/09/blog-post_24.html

Saturday, April 28, 2012

அன்பார்ந்த தொ நி 4 மாணவர்களே..

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் இங்கு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்!
உங்களுக்கு இன்னும் சில நாட்களில் தமிழ்க்கட்டுரைத் தேர்வு வந்துவிடும் அல்லவா??

அதற்காக இன்று நான் ஒரு சில கருத்துக்களைப் போடுகிறேன். நீங்கள் அவற்றைப் பார்த்து -  படித்து,  ஏதாவது கருத்து அல்லது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

இப்போது கீழ்க்காணும் படத்தொடரைக்காணுங்கள் :

இப்போது படத்தொடரை நன்றாப் பார்த்துவிட்டீர்களா?

என்னென்ன தெரிகிறது?

A. முதல் படத்தில் ஒரு சிறுவன் வருகிறான், மாணவன்  போல  தெரிகிறது. 

எப்படி மாணவன் என்று தெரிகிறது?

அவன் ஆடையைப் பாருங்கள். சட்டையை கால் சட்டையினுள் செருகி இருக்கிறான்.
சாதாரணமாக ஒரு சிறுவன் வெளியில் சென்றால் பெரும்பாலும் ஒரு 

டி-சட்டையை கால் சட்டையினுள்  செருகாமல்  செல்வதுதான்  வழக்கமாக  இருக்கும். சரிதானே ?

தரையில் பத்து வெள்ளியை பார்க்கிறான்.  அவன் முகபாவனையில் இருந்து அவனுக்கு ஆச்சரியம், சந்தேகம் போன்ற உணர்ச்சிகள் தெரிகின்றன, அல்லவா?

அவன் என்ன செய்யலாம் என்ற ஒரு சிந்தனையில் இருக்கிறான் என்றும் தெரிகிறது.

இந்தப் படத்திற்காக எந்த மாதிரியான இனியத் தொடரையோ,  அழகிய  வாக்கியத்தையோ பயன்படுத்தலாம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் அந்தச் சம்பவம் நடந்த நாளில் இயற்கை எப்படி இருந்தது என்று கூறினால், உங்கள் கட்டுரையைப் படித்துப் பார்க்கும் மக்களுக்கு உங்கள் கட்டுரையில் எந்த மாதிரி சூழ்நிலைகள் இருக்கும் என்றும், என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கலாம் என்றும் ஓர் எதிர்பார்ப்போடு படிப்பார்கள்.

இந்தக் கட்டுரையில்,  பள்ளியில்  ஓர் இனிய  நாளாக  இருக்கிறது.   அது  காலையோ, மதியமோ,  ஒய்வு  நேரமாகவோ,  பள்ளி  இடைவேளை  நேரமாகவோ இருக்கலாம்.

So... What do you think the weather is going to be like in your composition ? ? I mean.. what do you see or THINK you see or WANT to see in the first picture ? ? :)

காற்று அடிக்கிறதா ?

இதமான தென்றல் வீசுகிறதா ?
அதனால் மரம் செடி கோடி எல்லாம் அசைகின்றனவா ?

இல்லை - முற்றிலும் மாறாக பயங்கர வெயில் அடிக்கிறதா ?

" மொட்டை வெயில் மண்டையைப் பிளக்கும் நேரமா " ? ?


B.  இப்போது  இரண்டாவது  படத்தைப்  பாருங்கள்.  சிறுவன்  ஓர்  ஆடவரிடம்  சென்று  பணத்தைக்  கொடுக்கிறான்.  விளக்கம்  கொடுக்கிறான்.  


அவன்  பணத்தை  எங்கே  கண்டான், ( School Field, Eco-Garden?? )  சுற்றுமுற்றும்  கண்டு  எங்கும்  யாரையும் காணவில்லை,  அந்த  ஆடவர்  கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.

சரி அந்த ஆடவர் யாராக இருக்கக்கூடும்?

பள்ளி ஆசிரியர் - அங்கு பள்ளி இடைவேளையின் போது அந்த வழியாக நடந்து வந்தவரா?

பள்ளியில் உள்ள பள்ளி அலுவலகத்தில் ( School General Office) வேலை பார்க்கும் அலுவலகரா ( Office Staff -  Administration Clerk, Admin Manager) ?

பள்ளி கட்டொழுங்கு ஆசிரியரா ( School Discipline Master )?

அல்லது உங்கள் பள்ளி தமிழ் ஆசிரியர்களில் ஒருவரா?


C. அந்த நேரத்தில் சிறுவனின் நண்பனாகவோ, வகுப்பு  மாணவனாகவோ  இருக்கலாம்.

அவன் முகபாவனை எப்படி இருக்கிறது? பதற்றம்? பயம்? இங்கு படத்திற்காக 
எந்த மாதிரியான இனியத் தொடரையோ,  அழகிய  வாக்கியத்தையோ  பயன்படுத்தலாம் என்று யோசித்துப் பாருங்கள்.

அவன் ஓடி வந்து ஆசிரியரிடம் என்ன சொல்கிறான் அல்லது கேட்கிறான்  என்று நினைக்கிறீர்கள்?  

அந்த இரண்டாவது சிறுவனின் சூழ்நிலையைச்  சற்று பரிதாபத்திற்குறியது போல நீங்கள் எழுதினீர்கள் என்றால் அவன் மேல் கதையைப் படிப்பவர்கள் அனுதாபம்படும் ( Sympathy, Empathy - அந்தச் சிறுவன் பாவம் என்ற ஓர் உணர்ச்சி ) வண்ணம் கதை அமையும்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணமா?

அவன் வீட்டில் பண நெருக்கடியா? அதனால் அவன் பெற்றோர்
அவனுக்கு மிகவும் யோசித்து கொடுத்த பணமா அது?

பணம் தொலைந்து விட்டது என்று தெரிந்தால் அவன் பெற்றோர் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இனி அவனுக்குப் பணம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

பணம் தொலைத்தவனின் நிலையை கேட்ட சிறுவனுக்கும் ஆடவருக்கும் என்ன மனநிலை உண்டாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ( பரிதாபப்பட்டிருப்பார்கள், மனம் நெகிழ்ந்திருப்பார்கள் )


D. அப்போது ஆடவர் அந்தச் சிறுவனிடம் என்ன சொல்கிறார் என்று நினைக்கிறீர்கள்?

அப்போது பணம் எடுத்தவனுக்கு எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ஆடவர் என்ன செய்வார் அல்லது சொல்வார் என்று நினைக்கிறீர்கள் ?

பணம் தொலைத்தவனுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இறுதியில்  என்ன நடந்திருக்கலாம்?

* நிச்சயம் பணம் தொலைத்தவன் பணம் கண்டெடுத்தவனிடம் நன்றி கூறியிருப்பான்.

* ஆடவர் பணம் தொலைத்தவனிடம் மேலும் கவனமாக இருக்கக் கூறியிருப்பார்.

* ஆடவர் பணம் கொண்டுவந்தவனிடம் நன்றி கூறி பாராட்டி இருப்பார்.

* இரு சிறுவர்களும் மேலும் நெருங்கிய நண்பர்களாகியிருக்க வாய்ப்பு உண்டு.


முக்கியமான ஒரு குறிப்பு : 

* நீங்கள் கதையில் வரும் ஆட்கள் பேசுகிறார்கள் என்று  காட்டவே  தேவை  இல்லை.

----- என்று கூறினான்.
---- என்று மொழிந்தான்.
---- என்று செப்பினான்.
---- என்று கேட்டான்.
----- என்று  வினவினான். 

 இவ்வாறு விளக்கம் கொடுத்து நீங்கள் எழுதினாலேயே போதுமானது. 

நீங்கள் பேச்சுத் தொடர் எழுதுகிறேன் என்று சொல்லி எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் முற்றுப்புள்ளி எங்கே வைப்பது, மேற்கோள் புள்ளிகள் எங்கே வைப்பது என்ற விஷயங்கள் தெரியாமல் பிழைகள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கும்.


சரி... இப்போது ஒரு கட்டுரையைச் சரிவர எழுதுவது எப்படி என்று தெரிந்ததா? உங்களுக்குக் கேள்வி இருந்தால் நாளை என்னிடம் நீங்கள் கேட்கலாம்.

கீழே நான் இன்னுமொரு இடுகையைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதையும் நீங்கள் பார்த்துப் பயன்பெறலாம். ஆனால், அது உங்கள் போது அறிவுக்கு மட்டும்தான். (extra reading - if you want to...) :)


http://cckpstamil.blogspot.com/2011_06_01_archive.html