Map of Tamilnadu

Wednesday, January 16, 2013

நல்ல கருத்துக்கள் கொண்ட புத்தகம்

புதுவையில் நான் ஒரு மாத கால இலவசப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பொது கண்டெடுத்த புத்தகம் ஒன்று. சிறிய நூல் தான் இருப்பினும், பொருள் மிக அரிது!  நூலின் ஒரு சில கருத்துக்களை உங்களுடன் நான் இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

வேலை: அதுவே ஒரு தியானம்
உங்கள் வேளையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாகக் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஆண்டவன் இருக்கிறான். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவன்தானே? இந்த உண்மையை மறக்கக்கூடாது.

குறை கூறலாமா?
நான் திரும்பவும் கூறுகின்றேன், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள். குறை கூறுவது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நடந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதைக் கண்டனம் செய்தால் கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் அன்றுதானே அர்த்தம்? அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி கிட்டும்.